PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அழுத்தம்:
 
விசை ஏற்படுத்தும் விளைவை அழுத்தம் என்ற இயற்பியல் அளவைப் பயன்படுத்தி அளக்கலாம்.
ஒரு பொருளின் ஒரு சதுர மீட்டர் புறப்பரப்பின் மீது, செங்குத்தாகச் செயல்படும் விசை அல்லது உந்து விசை ’அழுத்தம்’ என வரையறுக்கப்படுகிறது.
அழுத்தம் =உந்து விசை(அ) விசைபரப்பு
 
அதாவது,
 
\(P\ =\ \frac{F}{A}\)
 
அழுத்தத்தின் அலகு நியூட்டன்சதுர மீட்டர  அல்லது நியூட்டன்மீட்டர2 (\(Nm^{-2}\)).
 
பிரான்ஸ் நாட்டு அறிவியல் அறிஞரான ப்ளைஸ் பாஸ்கல் என்பவரை சிறப்பிக்கும் வகையில் ஒரு நியூட்டன்சதுர மீட்டர என்பது, ஒரு பாஸ்கல் (\(1\ Pa\)) என்று அழைக்கப்படுகிறது.
 
\(1\ Pa\ =\ 1\ Nm^{–2}\).
விசையால் செலுத்தப்படும் அழுத்தமானது விசையின் எண் மதிப்பையும், அது செயல்படுத்தப்படும் தொடுபரப்பையும் சார்ந்து இருக்கும்.
ஒரு பொருளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும் அல்லது உந்து விசை செயல்படும் பரப்பைக் குறைக்க வேண்டும்.
 
மிகச்சிறிய பரப்பின்மீது அதிக அழுத்தத்தைச் செலுத்தி அதிக விளைவை ஏற்படுத்துவற்காகவே, கோடாரி, ஆணி, கத்தி, ஊசி, துப்பாக்கிக் குண்டுகள் முதலியன மிகவும் கூர்மையான முனையைக் கொண்டுள்ளன.