PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அழுத்தம் - எடுத்துக்காட்டுகள்:
  • நீங்கள் ஒரு மழுங்கிய ஆணியை மரத்தில் அடிக்க முயற்சித்தால், எதுவும் நடக்காது. இருப்பினும், அதே சக்தியை நீங்கள் கூர்மையான ஆணியைப் பயன்படுத்தினால், ஆணி மரத்தில் எளிதில் ஊடுருவிவிடும். அழுத்தத்தைத் தீர்மானிக்கும் காரணி சக்தி மட்டுமல்ல என்பதை இது காட்டுகிறது; அழுத்தம் பரப்பளவையும் சார்ந்துள்ளது. ஒரு கூர்மையான ஆணிக்கு, தொடர்புப் பகுதி மிகவும் சிறியது, எனவே முழு சக்தியும் ஒரு குறிப்பிட்டப் புள்ளியில் குவிகிறது, இது ஆணி மரத்தில் துளைக்க உதவுகிறது. ஆனால் மழுங்கிய ஆணியை, கூர்மையான ஆணியுடன் ஒப்பிடும்போது பரப்பளவு அதிகமாக இருப்பதால், அது மரத்திற்குள் எளிதில் ஊடுருவாது.
2.png
மரத்தில் ஒரு ஆணியை அடிப்பது
Example:
  1. அழுத்தத்தைக் குறைக்கவும், சாலையுடனான தொடுபரப்பை அதிகரிக்கவும் கனரக சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக் கொண்டுள்ளன.
  2. தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்கவும், தொடுபரப்பை அதிகரிக்கவும் முதுகில் சுமந்து செல்லும் பைகளில் அகலமான பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.
  3. பாலைவனத்தில் அகலமான பாதங்கள் இருப்பதால் ஒட்டகங்கள் எளிதாக நடக்க முடியும். அவைகளின் பரந்த பாதங்கள், நிலத்தின் மீது ஒரு பெரிய மேற்பரப்பில் செயல்பட, ஒட்டகத்தால் நிலத்தின் மீது செலுத்தப்படும் அழுத்தத்தைக் குறைக்கும். அழுத்தம் மற்றும் பரப்பளவு நேர்மாறான விகிதத்தில் இருப்பதை நாம் அறிவோம். எனவே, ஒட்டகத்தின் கால்கள் மணலில் மூழ்காது. இதனால், எளிதாக நடக்க முடியும்.
4.jpg
பாலைவனத்தில் ஒட்டகங்கள்