PDF chapter test TRY NOW

அன்றாட வாழ்வில் நாம் பல வகையான பொருட்களை பயன்படுத்துவோம். உணவு பொருட்கள், கருவிகள், சாதனங்கள், வாகனங்கள் என அனைத்தையும் வெப்பமானவை, குளிர்ச்சியானவை என வகைப்படுத்தலாம். சில பொருட்கள் சம அளவு வெப்பநிலையை கொண்டவை போல் தோன்றலாம். எனினும் அவற்றின் இடையே சிறிதளவு வெப்ப வித்தியாசம் இருக்கலாம். எனில் எவ்வாறு அந்த வித்தியாசத்தை அளப்பது? எவ்வாறு இரு பொருள்களை வெப்பத்தைக் கொண்டு ஒப்பீடு செய்வது?
 
tea11051131280jpgw1280.jpgicecream59280481280.jpg

செயல்பாடு:
 
கீழே கொடுக்கபட்ட படங்களில் உள்ள பொருட்களை வெப்பமானவை, குளிர்ச்சியானவை என வகைப்படுத்தவும்:
 
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியை அளக்க ஒரு இயற்பியல் அளவு தேவைப்படுகிறது. அந்த அளவே ‘வெப்பநிலை’ எனப்படும்.
வெப்பநிலை என்பது ஒரு பொருள் பெற்றிருக்கும் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவை குறிப்பிடும் ஒரு இயற்பியல் அளவை குறிக்கும்.
ஒரு பொருளுக்கு வெப்பம் அளிக்கப்படும்பொழுது அதன் வெப்பநிலை அதிகரிக்கும், குளிர்ச்சி அளிக்கப்படும்பொழுது அதன் வெப்பநிலை குறையும்.
வெப்பநிலை என்பது ஒரு அமைப்பில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் அளவீடு ஆகும். அதன் \(SI\) அலகு கெல்வின். மேலும், வெப்பநிலையானது செல்சியஸ், ஃபாரன்ஹீட் போன்ற அலகுகளிலும் அளவிடப்படுகிறது.
வெப்பநிலைமானி: வெப்பநிலையை அளவிட ‘வெப்பநிலைமானிகள்’ பயன்படுத்தபடுகின்றன.  அவை சில பொதுவான திட்ட அளவுகளைக் கொண்டு தரப்படுத்தப்படுகின்றன.
clinicalthermometer153666w1920 (1).png
வெப்பநிலைமானி
 
வெப்பமானிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் அலகுகள்:
 
1. செல்சியஸ்
 
2. பாரன்ஹீட்
 
3. கெல்வின்
 
வெப்பநிலை அளவீடுகளின் பயன்பாடுகள்:
 
1. செல்சியஸ் அளவுகோல் வானிலை தொடர்பான வெப்பநிலைகளை அளக்க பயன்படுத்தப்படுகிறது. பாரன்ஹீட் அளவுகோல் பொதுவாக மருத்துவ வெப்பமானிகளில் காணப்படுகிறது.
 
2. இது மனித உடல் வெப்பநிலையை அளவிடுகிறது. இந்த அலகு அமெரிக்காவிலும் அதன் பிரதேசங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
3. அறிவியல் அறிஞர்கள் ஆய்வகங்களில் சோதனைகளை நடத்துவதற்கு கெல்வின் அலகைப் பயன்படுத்துகின்றனர்.
உங்களுக்கு தெரியுமா?
 
மனித உடலின் இயல்பான வெப்பநிலை பின்வருமாறு:
 
செல்சியஸ் அளவில் - \(36 °C\) முதல் \(37 °C\)
 
பாரன்ஹீட் அளவில் - \(97 °F\) முதல் \(99 °F\)
 
கெல்வின் அளவில் - \(309 K\) முதல் \(310 K\)
செயல்பாடு:
 
நீங்கள் வசிக்கும் நகரத்தில் ஒரு வாரத்தில் நிலவிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை செய்திகள் மூலமாக சேகரித்து அவற்றை பட்டியலிடவும். அந்த மதிப்புகள் ஆண்டு முழுவதும் அதே அளவில் இருக்குமா என்று சிந்திக்கவும்.