PDF chapter test TRY NOW
மின்னோட்டத்தின் சூத்திரம் பின்வருமாறு:
\(\text{மின்னோட்டம்}\) \(=\) \(\frac{\text{மின்னூட்டத்தின் அளவு }}{\text{காலம்}}\)
\(I = Q/t\)
[\(I\) - மின்னோட்டம், \(Q\) - மின்னூட்டம், \(t\) - காலம்]
‘கூலூம்’ என்பது மின்னூட்டத்தின் அலகு. அதன் குறியீடு ‘\(C\)’
ஒரு மின்கடத்தியின் வழியாக ஒரு வினாடியில் ஒரு கூலம் மின்னூட்டம் பாய்ந்தால் அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் எனலாம்.
மின்னோட்டத்தை அளக்கும் கருவி:
அம்மீட்டர் என்பது மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவியாகும்.
அம்மீட்டர்
செயல்பாடு:
ஒரு மின்கலம், ஒரு அம்மீட்டர் மற்றும் மின்விளக்கு ஆகியவற்றைக் கொண்டு எளிய மின் தொடரை உருவாக்கவும். மின் தொடரில் பாயும் மின்னோட்டத்தை அம்மீட்டர் மூலம் அளவிடவும்.
கணக்கீடு:
\(15\) விநாடிகளுக்கு ஒரு மின்சுற்று வழியாக \(3\) கூலம் மின்னூட்டம் பாயும் போது, அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தின் அளவு என்னவாக இருக்கும்?
மின்னூட்டம், \(Q = 3 C\)
நேரம், \(t = 15 s\)
\(I = Q/t = 3/15 = 0.2 A\)
எனில், மின்சுற்று வழியாக பாயும் மின்னோட்டம் \(0.2\) ஆம்பியர்.