PDF chapter test TRY NOW

ஒரு பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கை பொருளின் அளவு எனப்படும். ஒரு பொருளில் இருக்கும் துகள்கள் அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் போன்றவை.
 
1200pxAtomDiagramsvg.png
 
பொதுவாக, பொருளின் அளவு அந்த பொருளில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்தகவில் இருக்கும்.

 

பொருளின் அளவு ∝ அணுக்கள் அல்லது  மூலக்கூறுகளின் எண்ணிக்கை


pennies4260111280w1278.jpg
செப்பு நாணயங்கள்
 
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள செப்பு நாணயங்களின் எண்ணிக்கையை ஒருவர் எளிதாக எண்ணலாம். ஆனால், அந்த நாணயத்தில் இருக்கும் செப்பு அணுக்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிடுவது?
 
அணுக்கள் கண்ணுக்குத் தெரியாததால் செப்பு அணுக்களை எண்ணுவது சாத்தியமில்லை. மோல் என்பது ஒரு பொருளின் அளவை அளவிட பயன்படும் அலகு. இது ஒரு \(SI\) அலகு ஆகும்.  இது ‘mol’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
ஒரு மோல் என்பது \(6.023×10^{23}\) பொருட்கள் அல்லது துகள்களைக் கொண்ட பொருளின் அளவு என வரையறுக்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா?
 
\(6.023×10^{23}\) மதிப்பு அவோகேட்ரா  எண் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒளிச்செறிவு
shutterstock_1393589660.jpg
கிரிக்கெட் மைதானம்
 
கிரிக்கெட் போட்டியில் நடுவர்கள் ஒளியின் அளவை அளக்க ஒரு கருவியை பயன்படுத்துவர். மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாவிட்டால் போட்டியை நடத்த அனுமதி அளிக்கமாட்டார்கள்.
 
எனில் எவ்வாறு அதனை அளவீடு செய்வது?
 
ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு ‘ஒளிச்செறிவு’ எனப்படும். ஒளிச்செறிவின்  \(SI\) அலகு ‘கேண்டிலா’ஆகும். இதனை ‘\(cd\)’ என்ற குறியீட்டால் குறிக்கலாம்.
 
shutterstock681291817.jpg
ஒளி மூலத்திலிருந்து வெளிவரும் ஒளி
 
எரியும் ஒரு மெழுகுவர்த்தி வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக ஒரு கேண்டிலாவிற்கு சமமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு மெழுகுவர்த்தி சுமார் \(1\) cd ஒளியின் செறிவுடன்  ஒளியை வெளியிடுகிறது.
 
candle17506401280.jpg
மெழுகுவர்த்தி
 
அளக்கும் கருவி ஒளிச்செறிவினை அளவிடும் கருவி, ஒளிமானி (Photometer), ஒளிச்செறிவுமானி (Luminous intensity meter) இவை ஒளிச்செறிவினை நேரிடையாக ‘கேண்டிலா‘ அலகில் அளவிடுகிறது.
 
dfdfd.png
ஒளிமானி
 
பயன்கள் ஒளிமானி முக்கியமாக புகைப்படத்தில் ஒளிச்செறிவினை சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது. நடுவர், கிரிக்கெட் முதலிய போட்டியின் போது, ​​இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒளிச்செறிவினை சரிபார்க்கிறார்.
உங்களுக்கு தெரியுமா?
 
ஒளி உணரப்பட்ட திறனை, ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் என குறிக்கலாம். இதன்  \(SI\) அலகு ‘லுமென்’ (lumen) எனப்படும். ஒரு லுமேன் என்பது, ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில், ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடும் ஒளிமூலத்தின் திறன் என வரையறுக்கப்படுகிறது.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/Atom_Diagram.svg/768px-Atom_Diagram.svg.png
https://cdn.pixabay.com/photo/2014/08/24/07/24/pennies-426011_1280.jpg