PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கூட்டுத்திசுக்கள் பல வகை செல்களால் ஆனவை. இந்த செல்கள் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட ஒரு பணியை செய்யும்.
இதில் பாரன்கைமா மற்றும் ஸ்கிளீரன்கைமா செல்கள் உள்ளன. ஆனால் கோலன்கைமா செல்கள் இதில் இருக்காது. அவையாவன,
  • சைலம்
  • ஃபுளோயம்
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_6.png
சைலம் மற்றும் புளோயம் கூட்டுச் செல்கள்
சைலம்
  • சைலம் ஒரு கடத்தும் திசு ஆகும்.
  • பணி: இந்த திசுவானது வேரிலிருந்து நீர் மற்றும் கனிம ஊட்டச்சத்துக்களை மேல் நோக்கி தாவரத்தின் இலைப்பகுதிக்கு கடத்தும்.
  • சைலம் தாவர உடலுக்கு வலிமை அளிக்கிறது.
சைலம் பல வகையான உறுப்புகளால் ஆனது. அவை நான்கு வகைப்படும்.
  • சைலம் டிரக்கீடுகள்
  • சைலம் நார்கள்
  • சைலக்குழாய்கள்
  • சைலம் பாரன்கைமா
1. சைலம் டிரக்கீடுகள்
  • நீண்ட அல்லது குழாய் போன்ற அமைப்பை கொண்டது.
  • தடித்த லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.
  • செல்களின் முனைப்பகுதி மழுங்கிய, சிறுத்த அல்லது உளி போன்ற அமைப்புடையது.
  • இதன் செல்களில் புரோட்டோபிளாசம் இருக்காது.
  • டிரக்கீடுகளில் பெரிய உட்குழல் பகுதி கொண்டுள்ளது அதில் எந்த பொருளும் காணப்படாது.
  • பணி: நீரைக் கடத்தும் மற்றும் தாவர உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.
2. சைலம் நார்கள்
  • செல்கள் நீண்ட மற்றும் லிக்னின் பெற்று காணப்படும். இதன்  செல்களின் இருமுனைகளும் கூர்மையானவை.
  • பணி: நீர், ஊட்டச்சத்துக்களைக் கடத்தும் மற்றும் தாவர உடலுக்கு வலிமையைத் தரும்.
3. சைலக்குழாய்கள்
  • நீண்ட உருளை மற்றும் குழாய் வடிவம் போன்றது.
  • செல்சுவர் லிக்னின் உள்ள பெரிய மையக் குழிகளைக் கொண்டது.
  • புரோட்டோபிளாசம் இல்லாத இறந்த செல்களை கொண்டது.
  • செல்கள் நீள் அச்சுக்கு இணையாக இருக்கும்.
  • துளைகள் கொண்ட குறுக்கு சுவரினால் பிரிக்கப்பட்டுள்ளன.
  • முழு அமைப்பும் காண்பதற்கு நீர்க்குழாய் போல் தோன்றும்.
  • முக்கியப்பணி: நீர், கனிமங்களைக் கடத்தும் மற்றும் தாவர உடலுக்கு வலிமையை கொடுக்கும்.
4. சைலம் பாரன்கைமா:
  • செல்கள் மெல்லிய சுவர் மற்றும் உயிருள்ளது .
  • முக்கியப்பணி:ஸ்டார்ச் மற்றும் கொழுப்புக்களைச் சேமிக்கும்.
YCIND31052022_3819_Organisation_of_tissues_1.png
சைலம் குறுக்கு வெட்டுத் தோற்றம்
ஃபுளோயம்
இது நான்கு வகையான கூறுகளாக காணப்படுகிறது.
  • சல்லடைக்குழாய் கூறுகள்
  • துணைச் செல்கள்
  • ஃபுளோயம் பாரன்கைமா
  • ஃபுளோயம் நார்கள்
1. சல்லடைக்குழாய் கூறுகள்
  • ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகள் சல்லடைக்குழாய் கூறுகள் ஆகும்.
  • மெல்லிய செல்களால் ஆன நீண்ட குழாய் போன்ற அமைப்பு.
  • சுவர்களின் அடிப்பகுதியில் துளைகள் இருப்பதால் இவை சல்லடைக்குழாய் தட்டுகள் ஆகும்.
  • முக்கியப்பணி: தாவர இலைகளிலிருந்து உணவை சேமித்து உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்யும்.
2. துணை செல்கள்
  • சல்லடைக் குழாய் செல்கள் பக்கச்சுவரில் ஒட்டிய நீண்ட செல்கள் துணை செல்கள் ஆகும்.
  • துணைச் செல் சல்லடைக் குழாய் செல்லின் நீளத்திற்கு இணையான நீளம் உடையதாக இருக்கும் அல்லது தாய் செல் குறுக்கு பகுப்படைந்து தொடர்ச்சியாக துணை செல்களை உருவாக்கும்.
3. ஃபுளோயம் பாரன்கைமா
  • உயிர் உள்ள செல்கள் ஆகும். இது சைட்டோபிளாஸம் மற்றும் நியூக்ளியஸைக் கொண்டது.
  • முக்கியப்பணி: ஸ்டார்ச்சை சேமிக்கும்.
4. ஃபுளோயம் நார்கள்
  • முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை ஃபுளோயத்துடன் தொடர்புடைய ஸ்கிளீரன்கைமா செல்கள் ஃபுளோயம் நார்கள் ஆகும்.
  • இதன் செல்கள் நீண்ட, லிக்னின் படிந்த மற்றும் தாவர உடலுக்கு வலிமையை தரும்.
YCIND31052022_3819_Organisation_of_tissues_2.png
ஃபுளோயம் நீள்வெட்டுத் தோற்றம்