PDF chapter test TRY NOW
ஆக்குத்திசு மற்றும் நிலைத்த திசுவிற்கும் உள்ள வேறுபாடுகள்
ஆக்குத்திசு | நிலைத்த திசு |
செல்கள் சிறியவை, கோள அல்லது பல்கோண வடிவமுள்ளவை மற்றும் வேறுபாடு இல்லை. | செல்கள் பெரியவை, வேறுபாடு உடையது மற்றும் பல வடிவங்கள் கொண்டவை. |
சைட்டோபிளாஸம் அடர்த்தியானது. வெற்றிடங்கள் காணப்படுவதில்லை. | உயிருள்ள நிலைத்த செல்களின் மையத்தில் பெரிய வெற்றிடங்கள் இருக்கும். |
செல்களுக்கு இடையே இடைவெளியில்லை | செல்களுக்கு இடையே இடைவெளி உண்டு. |
செல்சுவர் மெல்லிய மற்றும் வளையும் தன்மையுடையது. | செல் சுவர் தடித்தது. |
நியூக்ளியஸ் பெரியது மற்றும் முக்கியத்துவம் கொண்டது. | நியூக்ளியஸ் எளிதில் பார்க்க கூடியதில்லை. |
தாவர உடலுக்கு உறுதி மற்றும் வளையும் தன்மை கொண்டது. | உறுதியை மட்டுமே தரும். |
சைலம் மற்றும் ஃபுளோயத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
சைலம் | ஃபுளோயம் |
நீர் மற்றும் கனிமங்களைக் கடத்தும். | கரிமக் கரைபொருட்கள் அல்லது உணவுப் பொருட்களைக் கடத்தும். |
ஒரே திசையில் கடத்தல் நடைபெறும். (தாவரத்தின் வேரிலிருந்து மேல் பகுதிக்கு) | இரு திசைகளிலும் கடத்தல் நடக்கிறது. (இலையிலிருந்து சேமிப்பு உறுப்புக்கு அல்லது சேமிப்பு உறுப்பில் இருந்து வளரும் பாகங்களுக்கு.) |
டிரக்கீடுகள் மற்றும் சைலக் குழாய்கள் மூலம் கடத்தும். | சல்லடைக் குழாய்கள் மூலம் கடத்தும். |
சைலக்குழாய்கள், டிரக்கீடுகள், சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்களால் ஆனவை. | துணை செல்கள், ஃபுளோயம் பாரன்கைமா, சல்லடைக் கூறுகள் மற்றும் ஃபுளோயம் நார்களால் ஆனவை. |