PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அமைப்பு
  • நரம்பு செல்கள் மற்றும் நியூரான்களால் ஆனது.
  • உடலின் மிக நீண்ட செல்கள் ஆகும்.
  • நியூரான்கள் நீட்சி அடைந்து மெலிந்த நரம்பு நார்கள் காணப்படும்.  
  • ஒவ்வொரு நியூரானும் உட்கரு மற்றும் சைட்டோபிளாசத்துடன் சேர்ந்து செல் உடல் அல்லது சைட்டானாக (cyton) அமைந்துள்ளது.
  • புரோட்டோபிளாஸ்மிக் அமைப்பு — சைட்டானிலிருந்து நரம்பின் உணர்விழைகள் (dendrons) குட்டையான அதிக கிளைகளைக் கொண்டது.
  • ஆக்சான் (axon) — ஒரு நீண்ட ஒற்றை நார் போன்றது.
  • இவை சைட்டானில் இருந்து உருவாகி மிக மெல்லிய கிளைகளுடன் முடியும்.
பணி
  • உடலின் உட்பகுதியில் இருந்து அல்லது வெளிப்பகுதியில் இருந்து வரக்கூடிய தூண்டல்களைப் பெறும் திறன் உடையது
  • உடலின் பல்வேறு பாகங்களுக்கு சமிக்ஞையை (செய்தியை) அனுப்பும்.
  • பல நரம்பு நார்கள் இணைப்புத் திசுக்கள் மூலம் ஒன்றாக இணைந்துள்ளன.
YCIND03062022_3837_Organisation_of_tissues_TM_9th_1.png
நரம்புச் செல்
நரம்புத் திசுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் அடிப்படை அலகு நியூரான்கள் ஆகும்.
Important!
உடல் செல்களின் வயது
  • கண் விழி, பெருமூளை புறணியின் நரம்பு செல்கள் மற்றும் அதிகப்படியான தசை செல்கள் வாழ்நாளில் ஒரு முறை இறந்தால் அவை மீண்டும் உருவாவது இல்லை.
  • குடலின் எபிதீலிய புறணி செல்களின் வாழ்நாள் \(5\) நாட்கள்.
செல்கள் புதுப்பிக்க எடுத்துக்கொள்ளும் காலம்
  • தோல் செல் – ஒவ்வொரு \(2\) வாரங்கள்.
  • எலும்பு செல்கள் – ஒவ்வொரு \(10\) வருடங்கள். 
  • கல்லீரல் செல்கள் – ஒவ்வொரு \(300\) முதல் \(500\) நாட்கள். 
  • இரத்த சிவப்பு செல்கள் – \(120\) நாட்களில் இறந்து மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.
நரம்பு செல்களில் சென்ட்ரியோல்கள் இல்லாததால் அவை பகுப்படைவதில்லை. ஆனால், இவை கிலியல் செல்களிலிருந்து நரம்புருவாக்குதலின் மூலம் உருவாக்கப்படுகின்றன.