PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதசைத் திசுக்களின் பண்புகள்
- இது தசை செல்களால் ஆனது.
- இதில் முக்கியமான பகுதி சுருங்கத்தக்க திசு ஆகும்.
- இது நீண்ட செல்கள் அளவில் பெரியது.
- எண்ணற்ற தசை நுண் நார்களால் (மையோபைப்ரில்களால்) ஆனது.
- ஒவ்வொரு தசையும் பல நீண்ட உருளை வடிவ நார்களால் ஆனது.
- நார்கள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ளன.
தசைத் திசுக்களின் வகைகள்
இத்தசையின் அமைப்பு, இருப்பிடம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
- எலும்புச்சட்டக தசை அல்லது வரித் தசை
- மென் தசை அல்லது வரியற்ற தசை
- இதய தசை
i. எலும்புச்சட்டக தசை அல்லது வரித் தசை
அமைப்பு
- இந்த தசையின் நார்கள் நீண்ட, உருளை வடிவமான மற்றும் கிளைகள் அற்றவை. இவற்றில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை கோடுகோடாக அல்லது வரிவரியாக காணப்படும்.
- இந்த தசை செல்கள் பல உட்கருக்களைப் பெற்றுள்ளன.
இருப்பிடம்
- இத்தசைகள் கை, கால்களில் காணப்படும். இவை வேகமாக சுருக்கம் அடைகின்றன.
செயல்பாடு
- எலும்புச் சட்டகத்தசை — எலும்புடன் ஒட்டி உள்ளன உடலின் அசைவிற்குக் காரணமாக இருக்கும்.
- முறையான இயக்கத்திற்கு உதவுகின்றன (தசைகள் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்).
வரித் தசை
ii. மென் தசை அல்லது வரியற்ற தசை
அமைப்பு
- இந்த தசையின் நார்கள் கதிர் வடிவம் கொண்டு, மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.
- மையத்தில் ஒரே ஒரு உட்கரு உள்ளது. கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது. ஆதலால், இவை மென்மையான தசைகள் (வரியற்றதசைகள்) எனப்படுகின்றன.
இருப்பிடம்
- இரத்த நாளம், இரப்பை, சுரப்பிகள், சிறுகுடல் விரலிகள், சிறுநீர்ப்பையில் காணப்படும்.
செயல்பாடு
- இயங்கு தசைகள் (தானே இயங்கும்) — உடல் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது இல்லை.
தன்னிச்சையற்ற இயங்கங்கள்
- உணவுக் குழாயில் உணவு நகர்ந்து செல்வது அல்லது ரத்தநாளம் சுருங்கி தளர்வடைவது.
வரியற்றதசைத் திசு
iii. இதய தசை
அமைப்பு
- இதயத்திலுள்ள ஒரு சுருங்கத்தக்க தசையாகும். நார்கள் உருளை வடிவம் கொண்டவை, கிளைகள் உடையவை மற்றும் ஒற்றை உட்கரு உடையவை.
- இவற்றின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு வலைப்பின்னல் அமைப்பு உருவாக்குகின்றன. ஆதலால் இவை இடைச்செருகுத் தட்டு எனப்படுகின்றன.
இருப்பிடம்
- இவை அனைத்தும் இதயத் தசையின் தனிப்பட்ட தன்மை கொண்ட அம்சங்களாகும்.
செயல்பாடு
- இந்த இதயத் தசை தன்னிச்சையற்றது மற்றும் சீரான முறையில் சுருங்கும்.
இதயத் திசு