PDF chapter test TRY NOW
செல்கள் அனைத்திலுமே பகுப்பின் மூலம் சேய் செல்கள் உருவாவது செல் பகுப்பு ஆகும்.
மூன்று வகையான செல் பகுப்புகள் விலங்கு செல்களில் காணப்படும். அவையாவன,
- ஏமைட்டாசிஸ் – நேரடிப் பகுப்பு
- மைட்டாசிஸ் – மறைமுகப் பகுப்பு
- மியாசிஸ் – குன்றல் பகுப்பு
1. ஏமைட்டாசிஸ்
- எளிய முறை செல் பகுப்பு ஆகும்.
- நேர்முக செல்பிரிதல் நடைபெறும்.
- ஒரு செல் விலங்குகள், வயதான செல்கள் மற்றும் கருப்பைச்ச வ்வுகளில் நேர்முக செல்பிரிதல் நிகழ்வு நடைபெறும்.
- இந்த நிகழ்வில் முதலாவதாக உட்கரு நீண்டு, ஒரு சுருக்கத்தை அதன் மையத்தில் தோற்றுவிக்கிறது.
- இச்சுருக்கம் மெதுவாக உள்நோக்கிச் சென்று முடிவில் உட்கருவை இரண்டு சேய் உட்கருக்களாகப் பிரிக்கிறது.
- இதே போல் சைட்டோபிளாசத்திலும் சுருக்கம் ஏற்பட்டு இரண்டு சேய் செல்கள் தோன்றுகின்றன.
ஏமைட்டாசிஸ்
2. மைட்டாசிஸ்
முதன் முதலில் \(1879\) - ஆம் வருடம் ஃபிளம்மிங் (Fleming) என்பவரால் கண்டறியப்பட்டது.
சமபகுப்பு என்பது ஒரு செல் பிரியும் போது தாய் செல் மாதிரி இரு சேய் செல்களாக பிரியும்.
சேய் செல்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரி அளவுடைய டிஎன்ஏ, உட்கரு, ஒரே எண்ணிக்கையிலான ஜீன் மற்றும் குரோமோசோம்கள் தாய் செல்களில் உள்ளது போல் அமைந்துள்ளன.
இரு நிகழ்வுகளாக நடைபெறும். அவை
- கேரியோகைனசிஸ் (உட்கரு பகுப்பு)
- சைட்டோகைனசிஸ் (சைட்டோபிளாச பகுப்பு)
இடைநிலை
- இது உட்கருவின் ஓய்வுநிலை ஆகும். உட்கருவின் ஓய்வு நிலை என்பது இரு அடுத்தடுத்த செல்பகுப்பின் இடைவேளை நிலை ஆகும்.
- இடைவேளை நிலையின் போது செல்லானது அடுத்த செல் பகுப்பிற்கு தேவையான முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்து கொண்டு அடுத்த செல் பகுப்பிற்கு தயார் படுத்திக் கொள்கிறது.
அ. உட்கரு பகுப்பு (கேரியோகைனசிஸ்)
உட்கரு பகுப்பு என்பது, உட்கரு பகுப்படைந்து (பிரிந்து) இரு சேய் உட்கருக்களை உருவாக்கும்.
இவை நான்கு நிலைகளைக் கொண்டது. அவை பின்வருமாறு,
- புரோநிலை
- மெட்டாநிலை
- அனாநிலை
- டீலோ நிலை
மைட்டாசிஸ் செல் பகுப்பு
i. புரோநிலை (புரோ –முதல்)
- முதல் நிலையில் உட்கருவின் உள்ள குரோமோசோம்கள் தெரியும் வகையில் சிறியதாகவும், தடித்தும் அமைந்து உள்ளன.
- சென்ட்ரோசோம் பிரிந்து இருசேய் சென்ட்ரியோல்களாக மாறும்.
- சென்ட்ரியோல்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லின் துருவப் பகுதியை அடைகின்றன.
- ஒவ்வொரு சென்ட்ரியோலும் ஆஸ்டர் கதிர்கள் எனப்படும் ஒளிவீசும் கதிர்களால் சூழ்ந்துள்ளன.
- கதிர்கோல் (ஸ்பிண்டில்) இழைகள் இரு சென்ட்ரியோல்களுக்கு நடுவில் இருக்கும்.
- உட்கரு சவ்வு மற்றும் உட்கருமணி (நியூக்ளியோலஸ்) மெல்ல மறைய ஆரம்பிக்கின்றன.