PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதிரவங்கள்:
திரவங்கள் நிலையான வடிவத்தைப் பெற்றிருக்கவில்லை ஏன்?.
திரவம்
துகள்களின் இயக்கக் கொள்கைப்படி, திரவத்தில் பருப்பொருளின் துகள்கள்,
(i). ஒழுங்கான வரிசை அமைவைப் பெற்றிருக்கவில்லை.
(ii). வலிமை குறைந்த கவர்ச்சி விசையால் இணைக்கப்பட்டுள்ளது.
(iii). திண்மத்துகள்களைவிட, அதிக இயக்க ஆற்றலை பெற்றுள்ளது.
(iv). ஒன்றோடொன்று மோதலில் ஈடுபட்டு ஊடகம் முழுவதும் எளிதில் நகரும்.
திரவங்கள் நிலையான கனஅளவைப் பெற்றுள்ளன ஏன்?
திடப்பொருளை ஒப்பிடும்போது திரவத்தில் துகள்கள் சற்று இடைவெளியில் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று சற்று நெருக்கமாக அடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவைகளுக்கிடையில் உள்ள கவர்ச்சி விசை அவற்றை ஒன்றாக சேர்ந்திருக்க உதவுகின்றன. திரவங்களை அழுத்த முடியாது. எனவே அவை நிலையான கனஅளவைப் பெற்றுள்ளன.
வாயுக்கள்:
வாயுக்கள்
வாயுக்கள் நிலையான வடிவத்தைப் பெற்றிருக்கவில்லை ஏன்?
(i). ஒன்றோடொன்று நெருக்கமின்றி ஆனால் ஒன்றுக்கொன்று அதிக இடைவெளியில் பரப்பப்பட்டுள்ளது.
(ii). எந்த நிலையான கட்டுப்பாட்டிலும் இல்லை.
(iii). திரவத்தை விட வலிமைக் குறைந்த கவர்ச்சி விசையை பெற்றுள்ளது.
(iv). அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது மற்றும் தன்னிச்சையாக (தனியாக) எல்லா திசைகளிலும் நகர முடியும்.
வாயுக்கள் நிலையான கன அளவைப் பெற்றிருப்பதில்லை ஏன்?
வாயுக்களில் உள்ள துகள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமின்றி இருப்பதால் அவைகளுக்கிடையே அதிக இடைவெளி உள்ளது. ஆகவே அவைகள் ஒன்றுக்கொன்று நெருக்கப்படும் அல்லது எளிதில் அழுத்தப்படும். அழுத்தத்தைசெலுத்தி வாயுத் துகள்களை நெருக்கமாக கொண்டு வரலாம். வாயுக்களை எளிதில் அழுத்தமுடியும்.
ஒளி, ஒலி, வெப்பம் ஆகியவைகள் பருப்பொருள்கள் அல்ல. அவை ஆற்றலின் பல்வேறு வடிவங்கள் ஆகும்.
நீர், பாதரசம் முதலியன போன்ற திரவங்கள் ஏன் துகளிகளாக (துளிகள்) உள்ளன? நீர் அல்லது பாதரசம் துகள்கள் ஒன்றொடொன்று ஒட்டக்கூடிய தன்மையைப் (ஒத்திசைந்த ஆற்றல்) பெற்றிருப்பதால் கோள வடிவங்கள் அல்லது துகளிகள் அமைப்பைப் பெற்றுள்ளது.
திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களின் இயல்பு நிலை:
i. திண்மம்
துகள்களின் அமைப்பு: மிக நெருக்கமாகவும், ஒழுங்காகவும் அமைத்துள்ளது.
துகள்களின் இயக்கம்: குறிப்பிட்ட இடத்தில் அதிர்வுறுகிறது.
விளக்கப் படம்:
ii. திரவம்
துகள்களின் அமைப்பு:நெருக்கமின்றியும், ஒழுங்கற்றதாகவும் அமைத்துள்ளது.
துகள்களின் இயக்கம்: ஒன்றையொன்று சுற்றி நகருகிறது.
விளக்கப் படம்:
iii. வாயு
துகள்களின் அமைப்பு:நெருக்கமின்றியும், ஒழுங்கற்றதாகவும் அமைத்துள்ளது.
துகள்களின் இயக்கம்: எல்லா திசைகளிலும் வேகமாக நகருகிறது.
விளக்கப் படம்:
வாயு