PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகலவைகள் ஒரு தூய்மையற்ற பொருள். இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் இயற்பியல் முறையில் ஒழுங்கற்ற விகிதத்தில் கலந்துள்ளது.
உதாரணமாக குழாய் நீரில், நீர் மற்றும் சில உப்புகள் கலந்துள்ளது. எலுமிச்சை பானத்தில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் நீர் கலந்துள்ளது. காற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி மற்றும் பிற வாயுக்கள் கலந்துள்ளது. மண்ணில் மணல், களிமண் மற்றும் பல்வேறு உப்புகள் கலந்துள்ளது. இவையாவும் கலவைகள் ஆகும். இதேபோன்று கலவைக்கான மேலும் சில உதாரணங்கள் பால், பனிக்கூழ் (ஐஸ்கிரீம்), கல் உப்பு, தேநீர், புகை, கட்டை, கடல் நீர், இரத்தம், பற்பசை மற்றும் வண்ணப்பூச்சு (பெயிண்ட்) ஆகியன ஆகும்.
கலவையின் வகைகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் ஒன்றோடொன்று கலப்பதனால் கிடைக்கும் கலவை உலோகக்கலவை ஆகும்.
எலுமிச்சை சாறு
ஐஸ்கிரீம்
குறிப்பு:LPG - திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு. இது மிக எளிதில் தீப்பற்றக் கூடிய ஹைட்ரோகார்பன் வாயுவாகும்; புரோப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களின் கலவையைக் கொண்டுள்ளது; அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு திரவமாக்கப்படும். இது, வெப்பப்படுத்தவும், உணவு சமைக்கவும், வாகன எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இரும்பு (II) சல்பைடு:
சிறிதளவு இரும்புத்தூளை எடுத்து சல்பருடன் சேர்த்து கலக்கவும் பின் இக்கலவையை இரண்டாக பிரித்து கலவையின் முதல் பகுதியை மட்டும் வெப்பப்படுத்தவும் பின் மீதம் உடையக் கூடிய ஒரு கருப்பு நிற சேர்மத்தை நீங்கள் பெறுவீர்கள்.
இரும்பு மற்றும் சல்பர்
இரும்பு (II) சல்பைடு
மேற்கண்ட வினையில் உருவான கருப்பு சேர்மம் இரும்பு (II) சல்பைடு ஆகும். கிடைக்கப்பெற்ற இரும்பு சல்பைடின் பண்புகள் அதிலுள்ள பகுதிப் பொருட்களான இரும்பு மற்றும் சல்பரின் பண்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதை பின்வரும் தோற்றம் மற்றும் விளைவுகளின் மூலம் அறியலாம்.
இரும்பு (II) சல்பைடின் காந்த விளைவு
i. பொருள்:இரும்பு (தனிமம்)
தோற்றம் - அடர் சாம்பல் நிற தூள்
காந்தத்தின் விளைவு - ஈர்க்கப்படும்.
ii.பொருள்:சல்ஃபர் (சேர்மம்)
தோற்றம் - மஞ்சள் தூள்
காந்தத்தின் விளைவு - ஈர்க்கப்படாது.
iii.பொருள்:இரும்பு + சல்ஃபர் (கலவை)
தோற்றம் - கலங்கலான மஞ்சள் தூள்
காந்தத்தின் விளைவு - இரும்பு மட்டும் ஈர்க்கப்படும்.
iv. பொருள்:இரும்பு (II) சல்பைடு (சேர்மம்)
தோற்றம் - கருமை நிற திடப்பொருள்
காந்தத்தின் விளைவு - ஈர்க்கப்படாது.
மேற்கண்ட சோதனையின் மூலம்,
கலவைகள் மற்றும் சேர்மங்களுக்கிடையேயுள்ள
வேறுபாட்டினை நம்மால் சுலபமாக அறிய இயலும்.
குறிப்பு: இரத்தம் ஒரு கலவை ஆகும். இதில் இரத்தத்தட்டுக்கள், சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளாஸ்மா போன்ற பல்வேறு கூறுகள் கலந்துள்ளன.