PDF chapter test TRY NOW
சேர்மம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் கூடியிருப்பதாகும்.
சேர்மத்திற்கான சில எடுத்துக்காட்டுகள்:
i. சர்க்கரையானது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்று தனிமங்களால் ஆனது. சர்க்கரையின் வேதியியல் வாய்பாடு .
சர்க்கரை
ii. சோடியம் குளோரைடு என அழைக்கப்படும் சாதாரண உப்பு ஒரு சேர்மம் ஆகும். இது உணவிற்கு சுவையூட்டுகிறது. இது உலோகமான சோடியம் மற்றும் அலோகமான குளோரின் மூலம் உருவாகிறது.
உப்பு
பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தின் சேர்மங்கள் உரம் தயாரிக்கப் பயன்படுகிறது. சிலிக்கான் சேர்மங்கள் கணிப்பொறித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃப்ளோரின் சேர்மங்கள் நம் பற்களை வலுப்படுத்த உதவும் பற்பசையில் பயன்படுத்தப்படுகிறது.
பாஸ்பரஸ்
தனிமத்திற்கும் - சேர்மத்திற்குமிடையேயுள்ள வேறுபாடு:
தனிமம்:
i. ஒரே வகையான அணுக்களைக் கொண்டது.
ii. ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் மிகச்சிறிய துகளான அணுவானது தன்னகத்தே கொண்டுள்ளது.
iii. வேதியியல் முறையில் எளிய பொருட்களாகப் பிரிக்க இயலாது.
சேர்மம்:
i. ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்களால் ஆனது.
ii. ஒரு சேர்மத்தின் அனைத்துப் பண்புகளையும் மூலக்கூறு தன்னகத்தே கொண்டுள்ளது.
iii. வேதியியல் முறையில் தனிமங்களாகப் பிரிக்க இயலும்.