PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநிலை மாற்றம்:
பருப்பொருட்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற இயலும்.
உருகுதல்
துகள்களின் இயக்கக் கொள்கைப்படி, பருப்பொருளின் துகள்களானது இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளமையால் அவை நிலையாக இயக்கத்தில் உள்ளன.
i. வாயுக்கள், திரவங்கள் அதிக இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது.
ii. திண்மங்கள் மிகக் குறைந்த இயக்க ஆற்றல் கொண்டுள்ளது.
பருப்பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ வெப்ப ஆற்றலானது உறிஞ்சப்படுகிறது அல்லது வெளியிடப்படுகிறது. இது துகள்களில் ஆற்றல் மாற்றத்தை ஏற்படுத்தி நிலை மாற்றத்திற்குக் கொண்டு செல்கிறது. இத்தகைய மாற்றங்கள் மீள் இயற்பு மாற்றங்களாகும்.
பனிக்கட்டியை வெப்பப்படுத்தல்
நிலைகள் மாற்றத்தின் விளைவுகள்:
i. திண்மம் உருகி திரவமாகிறது.
ii. திரவம் ஆவியாகி வாயுவாகிறது.
iii. வாயு குளிர்வுற்று திரவமாகிறது.
iv. திரவம் உறைந்து அல்லது திண்மமாகி திடப்பொருளாகிறது.
திண்ம, திரவ வாயு நிலைகளின் மாற்றம்
திட உலோகமான காலியம் திரவமாக மாறுவதற்கு நமது கரத்தில் உள்ள வெப்பமே போதுமானது.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியின் படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். பருப்பொருளின் நிலை மாற்றத்தின் போது, வெப்ப ஆற்றலானது துகள்களின் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.