PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇசை என்பது சில அடிப்படை இசைக் குறிப்புகளின் கலவையாகும். அதாவது ச, ரி, க, ம, ப, த என்பதே இசையின் அடிப்படை கட்டமைப்பாகும்.
தனிமங்களின் பண்புகள் அடிப்படையிலான வகைகள்:
உலோகம்
உலோகங்கள்
அலோகம்
அலோகங்கள்
உலோகப்போலி
உலோகப்போலி
ராபர்ட் பாயில் கூற்று:
ராபர்ட் பாயில்
எளிய பொருட்களாக பகுக்க முடியாத பொருட்களுக்கு தனிமங்கள் எனப் பெயரிட்டார். தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரே வகையான அணுக்களால் ஆனவை என்று வரையறுத்துள்ளார்.
எ. கா.: அலுமினியம் என்னும் தனிமம் அலுமினியம் அணுக்களால் ஆனது. அலுமினிய அணுக்களிலிருந்து வேதியியல் ரீதியாக எளிமையான பொருட்களை பெறமுடியாது. ஆனால் அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் நைட்ரேட் மற்றும் அலுமினியம் சல்பேட் போன்ற சிக்கலான வேதிப்பொருட்களை உருவாக்க முடியும்.
அணு:
வேதிவினையில் ஈடுபடும் ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் அணுவாகும். இது தனித்தோ (அ) சேர்ந்தோ காணப்படும்.
மூலக்கூறு:
எ.கா.: ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் () அணுக்கள் உள்ளன.
நீர் () மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் உள்ளன.