PDF chapter test TRY NOW

ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறான்.
 
ஒவ்வொரு நெப்ஃரானும் பின்வரும் மூன்று நிலைகளில் தொடர்ச்சியாகச் சிறுநீரை உருவாக்குகிறது.
  1. கிளாமருலார் வடிகட்டுதல்
  2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
  3. குழல்களில் சுரத்தல்
1. கிளாமருலார் வடிகட்டுதல்:
 
கிளாமருலஸ் பகுதியும் பௌமானின் கிண்ணமும் இணைந்த பகுதி மால்பிஜியன் உறுப்பு ஆகும். இங்கு இரத்தத்தில் காணப்படும் தேவையான பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக வடிகட்டப்பட்டு சிறுநீரை உருவாக்குகிறது. இதனை உயிர் வடிகட்டி என அழைக்கப்படும். இவ்வாறாக வடிகட்டிய திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படும். 
 
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:
 
இது சிறுநீர் உருவாகுதலில் இரண்டாம் நிலையாகும். இங்கு அண்மைச் சுருள் நுண்குழலில்  கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகிய தேவையான பொருள்களை  'தேர்ந்தெடுத்துமீள உறிஞ்சுதல்' என்ற நிகழ்வின் மூலம் மீண்டும் உறிஞ்சுதல் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் சிறுநீர் ஒத்த அடர்வு தன்மையுடையதாக இருக்கும்.
இரண்டு கரைபொருள்களுக்கு இடையே நீர் கடந்து செல்லாத நிலை ஒத்த அடர்வு தன்மை எனப்படும்.
3. குழல்களில் சுரத்தல்:
 
வடிகட்டுதலில் இருந்து தவறிய உடலுக்குக் கேடு விளைவிக்கும் கழிவுப் பொருள்கள் குழல்களின் சுவரின் வழியே வெளியேற்றப்படுகிறது. இது சிறுநீர் உருவாகுதலின் கடைநிலை ஆகும். நுண் நாளங்களுக்குள் ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் சுரக்கப்படுகிறது.
 
சேய்மை சுருள் நுண்குழலில் வடிதிரவமாக பொட்டாசியம் மற்றும் பிற வேதிப்பொருள்களான  பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் சுரக்கப் படுகின்றன. இந்த நுண்குழலில் உள்ள வடிதிரவமே கடைசியாகச் சிறுநீர் என அழைக்கப் படுகிறது. இப்பகுதியில் உள்ள சிறுநீர் உயர் உப்படர்வுத் (hypertonic) தன்மையுடைய திரவமாகும்.
 
கடைசியாக சிறுநீரானது சேகரிப்பு நாளத்தின் வழியாக பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க்குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பையை அடைந்து பெரிஸ்டால்ஸிஸ் இயக்கத்தின் மூலம் அங்கிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நிகழ்வு நடைபெறும். இவை மைக்டியூரிஷன் அல்லது  சிறுநீர் வெளியேற்றம் என்றும் அழைக்கப்படும்.
 
கூழ்மப்பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம்:
 
சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்தெடுக்கும் திறனை இழக்கும் போது, உடலில் அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலைச் சிறுநீரக பழுதடைவு (Renal failure) எனப்படுகிறது.
 
நோயாளிகளுக்கு, செயற்கை சிறுநீரகத்தின் மூலம் இரத்தத்தைச் சுத்தம் செய்யும் முறை ஹீமோடையாலிசிஸ் (haemodialysis) என்று அழைக்கப்படுகிறது. நெடுநாள்களாகச் சிறுநீரகக் கோளாற்றுக்கு மருந்துகளாலோ அல்லது கூழ்மப்பிரிப்பினாலோ சிகிச்சை தர முடியாத போது மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
shutterstock_1962220087.jpg
ஹீமோடையாலிசிஸ்
 
Important!
முதல் சிறுநீரக மாற்றம்\(1954\) ஆம் ஆண்டில் பாஸ்டன் (\(USA\)) என்ற நகரத்திலுள்ள பீட்டர் பெண்ட் பிரிகாம் மருத்துவமனையில் பணியாற்றும் ஜோசப் இ முர்ரே என்ற மருத்துவர் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களான ரொனால்டு மற்றும் ரிச்சர்டு ஹெரிக் ஆகிய இருவரும் ஒத்த பண்புடைய இரட்டையர்கள் ஆவார்கள். இவர்களுக்கு முதன் முதலில் சிறுநீரக மாற்றத்தை வெற்றிகரமாகச் செய்தார். சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட ரிச்சர்டு ஹெரிக் எட்டு வருடங்கள் கழித்து பின் காலமானார்.