PDF chapter test TRY NOW
இரு மின்னூட்டங்களுக்கிடையில் உருவாகும் விசை மின் விசை என்று அழைக்கப்படுகிறது .
இவ்விசை ’தொடுகையில்லா விசை’ (non-contact force) வகையைச் சேர்ந்தவை ஆகும். ஏனெனில், இரு மின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடுதல் இல்லாமலேயே இவ்விசை செயல்படுகிறது.
மின்னூட்டங்களுக்கிடையில் ஏற்படும் மின்விசை (\(F\)) இரண்டு வகைப்படும் அவைகள் முறையே,
- கவர்ச்சி விசை
- விலக்கு விசை
கவர்ச்சி விசை:
வெவ்வேறு மின்சுமைக் கொண்ட மின்துகள்கள்
வெவ்வேறான மின்சுமை கொண்ட மின்னூட்டங்களுக்கு இடையே உண்டாக்கும் விசை, கவர்ச்சி விசை எனப்படும். மேலும், வெவ்வேறான மின்னூட்டங்கள் எப்பொழுது ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மை உடையது ஆகும்.
விலக்கு விசை:
ஒத்த மின்சுமைக் கொண்ட மின்துகள்கள்
ஒத்த மின்சுமை கொண்ட மின்னூட்டங்களுக்கு இடையே உண்டாகும் விசை, விலக்கு விசை எனப்படும். மேலும், ஒத்த மின்னூட்டங்கள் எப்பொழுது ஒன்றையொன்று விலக்கும் தன்மை கொண்டது ஆகும்.
Important!
இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலை மின்னியல் விசை நியூட்டனின் மூன்றாவது விதியின் அடிப்படையில் இயங்குகிறது. ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை நேர் வினையாகவும், இன்னொரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை எதிர் வினையாகவும் செயல்படும்.