PDF chapter test TRY NOW
ரூதர்ஃபோர்டின் சோதனையிலிருந்து,
அணுவின் நிறை உட்கருவில் செறிந்துள்ளது
என்பது தெளிவாகிறது. அதாவது
ஓர் அணுவின் நிறை எண் என்பது, அத்தனிம அணுவின் உட்கருவினுள் இடம் பெற்றுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை என்று வரையறுக்கலாம்.
புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து நியூக்ளியான்கள் என்று அழைக்கப்படுகிறது.
நிறை எண் (A):
நிறை எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை
எடுத்துக்காட்டாக ஓர் அணுவின் புரோட்டான்கள்
3, எலக்ட்ரான்கள் 3 மற்றும் நியூட்ரான்கள் 4
எனில் அதன் நிறைஎண் = 7 (3 புரோட்டான்கள்
+ 4 நியூட்ரான்கள்)
அணுஎண் மற்றும் நிறை எண்களை
குறியீட்டின் மூலம் குறிப்பிடுதல்.
ஓர் அணுவின் அணு எண்ணை கீழ்எழுதப்பட்ட
குறியீடு மூலமும் அதன் நிறை எண்ணை மேல்
எழுதப்பட்ட குறியீடு மூலமும் கீழே உள்ளவாறு
குறிப்பிடலாம்.
இங்கு X என்பது தனிமத்தின் குறியீடு, A என்பது நிறை எண், Z என்பது அணு எண் முறையே குறிக்கப்படுகிறது.
உதாரணமாக, நைட்ரஜனின் குறியீடு
நைட்ரஜனின் அணு எண் = 7
நைட்ரஜனின் நிறைஎண் = 14
அணு நிறைக்கும் அணு எண்ணிற்கும் உள்ள தொடர்பு:
நிறை எண் (A) = அணு எண் (Z) +
நியூட்ரான்களின் எண்ணிக்கை (n) or
[A = Z + n]
அணுஎண் (Z) = புரோட்டான்களின்
எண்ணிக்கை அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
நிறை எண் கணக்கீடு மாதிரி:
ஒரு தனிமத்தின் அணுவின் நிறைஎண் 39, நியூட்ரான்களின் எண்ணிக்கை 20 எனில்
அதன் அணு எண்ணை கணக்கிடு. மற்றும்
அத்தனிமத்தின் பெயரைக் கண்டுபிடி?
தீர்வு:
நிறை எண் = அணு எண் + நியூட்ரான்களின்
எண்ணிக்கை
அணு எண் = நிறைஎண் – நியூட்ரான்களின்
எண்ணிக்கை
= 39 - 20
அணு எண் = 19
அணுஎண் 19 - ஐ கொண்ட தனிமம் பொட்டாசியம் ஆகும்.