PDF chapter test TRY NOW
ஆல்ஃபா துகள்கள் நேர் மின்சுமை பெற்றவை.
ஒரு அணுவில் மின் சுமையானது சீராக
பங்கிடப்பட்டிருந்தால் ஆல்ஃபா துகள்கள்,
நேர்மின் சுமையின் விலக்க அழுத்தத்தை
முறியடிக்க தேவையான ஆற்றலைக்
கொண்டிருக்கும். கூலூம் விதிப்படி, மின்சுமை கொண்ட உருண்டையின் அடர்வு குறைவாக
இருந்தால் அதன் மேற்பரப்பில் உள்ள மின்புலம்
வீரியம் குறைந்து இருக்கும் என்பதை நீ
அறிந்திருப்பாய்.
அணுக்கள் மிகச் சிறியதாக இருப்பதால்
ஒவ்வொன்றாக எடுத்து அதை இலக்காக்கி ஆல்ஃபா துகள்களை அதை நோக்கி சுட முடியாது.
தங்கத்தை மெல்லிய தகடாகவும் வளைக்கவும்
முடியும் என உனக்குத் தெரியும்.
தங்கத் தகடு சோதனை
அவர்கள் ஒரு பரிசோதனையை
மேற்கொண்டார்கள். அதிகப்படியான ஆற்றல்
கொண்ட ஆல்ஃபா கதிர்களை உமிழும் இயற்கை
கதிரியக்க மூலத்தை தேர்ந்தெடுத்தனர்.
அதை ஒரு சிறியத் துளைக் கொண்ட காரீயப் பெட்டியின் உள்ளே வைத்தனர்.
ஆல்ஃபாத் துகள்கள் மூலத்திலிருந்து எல்லாத்
திசைகளிலும் வெளிப்பட்டது. எந்தத் துகள்கள்
பெட்டியின் சுவரில் மோதியதோ அவை
பெட்டியால் உட்கவரப்பட்டது. துளையின்
திசையில் வெளிப்பட்ட ஆல்ஃபா கதிர்கள்
வெளியேறின. இந்த கதிர்கள் அனைத்தும் நேர்கோட்டில் செல்லுகின்றன.
\(400\) அணுக்கள் தடிமன் உள்ள மெல்லியத்
தங்கத் தகட்டின் ஊடே ஆல்ஃபா துகள் கற்றை
செலுத்தப்பட்டது. அவை தங்கத் தகட்டை
தாக்கும் போது ஆல்ஃபா கதிர்கள் பெற்ற
விலக்கத்தை அதைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த
\(ZnS\) தடவப்பட்ட வளைத் தகட்டினுதவியால்
ஆராய்ந்தார்.
ஆல்ஃபா துகள்கள் திரையில் மோதும்போது, மோதிய இடத்தில் ஒரு ஒளிர்வை ஏற்படுத்தும், திரையில் உள்ள இந்த
புள்ளியின் மூலம், தங்கத் தகட்டை ஊடுருவிய
பின் ஆல்ஃபா துகள்கள் எடுத்துக்கொண்ட
பாதையைப் பற்றி அறியலாம். இந்த முழு அமைப்பும் காற்று இல்லாத கண்ணாடி
அறையில் வைக்கபட்டது. இதனால் ஆல்ஃபா துகள்கள் காற்று மூலக்கூறுகளு்டன் வினை புரிதலையும், அவற்றால் சிதரி அடிக்க படுவதையும்
தடுக்க்லாம். இந்த சோதனைகள் நம்பக தன்மைக்காக பலமுறை செய்யப்பட்டது.
அணு துகள்கள் விலகுதல்
ஒவ்வொரு முறையும் ஆல்ஃபா துகள்கள் தங்கத்
தகடடு்டன் மோதியபின் ஏற்பட்ட கோணத்தை கணக்கிடப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்டது.
இதிலிருந்து கீழ்கண்டவற்றை அறிந்தனர்.
- பெரும்பாலான ஆல்ஃபா துகள்கள் மெல்லிய தங்க தகட்டின் வழியாக விலக்கமின்றி ஊடுருவி சென்றன.
- சில ஆல்ஃபா துகள்கள் சிறு கோணத்தில் விலகிச் சென்றன. ஒரு சில ஆல்ஃபா துகள்கள் அதிக கோணத்தில் விலகிச் சென்றன.
- சில துகள்கள் வந்த பாதையிலே திருப்பி அனுப்பிப்பட்டன.
ஆல்ஃபா துகள்கள் சோதனை
இந்த ஆய்வுகள் பெரும்பாலான ஆல்ஃபா துகள்கள் எதிர்பார்த்த்படியே நடந்தன என்பதை காட்டுகிறது. ஆனால் சிறிய வேறுபாடுகளும் இருந்தன. மிகவும் அரிதாக \(2000\) துகள்களில் ஒன்று மட்டும் உலோக அணுக்கரு மீது பட்டு 180º கோணத்தில் வி்லக்கம் அடைந்ததது. அதாவது, ஆல்ஃபா துகள்கள் தங்கத் தகடடின் மீது மோதிய பின் வந்தவழியே திரும்பிச் சென்றன. திசை மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் துகள்களின் நகர்வு பாதைக்கு எதிராக ஒரு வலிமையான விசை இருந்தால் தான் முடியும் என்பதை அறிவாய்.