PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அறிவியலில் உள்ள மற்ற மாதிரிகளைப் போல தாம்சனின் அணு மாதிரியும் ஒரு கொள்கை அளவிலான வடிவமைப்பாகும். அறிவியலாளர்கள் தங்களது அறிவியல் மாதிரிகளை பல்வேறு ஆய்வுகள் மூலம் தவறானதா எனக் சோதிக்கின்றனர். தாம்சன் முன்மொழிந்த அணு மாதிரி கொள்கை அளவிளானது. அதனால் அறிவியலாளர்கள் அதனை ஆய்வு மூலம் சோதிக்க ஆர்வம் காட்டினர். ஒரு மாதிரியை சரியா, தவறா என்பதை எவ்வாறு சோதிப்பாய்? அணுக்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் அணுக்களின் உள்ளே என்ன என்பதை சக்திவாய்ந்த நுண்ணோக்கியால் விளக்க முடியவில்லை.
 
shutterstock1113317699 (1).jpg
ரூதர்ஃபோர்டு
  
இ. ரூதர்ஃபோர்டு என்ற பிரிட்டிஷ் இயற்பியலார் \(1871\)ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் \(30\)ம் நாள் ஸ்பிரிங்  குரோவ் என்ற இடத்தில் பிறந்தார். ரூதர்ஃபோர்டு “அணுக்கரு இயற்பியலின் தந்தை” என்று அழைக்கப்பட்டார். அவருடைய உலக பிரசித்தி பெற்ற “தங்கத்தகடு அணு ஆய்வு“ மூலம் அணுவின் மையப் பகுதியில் அணுக்கரு உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அணு அமைப்பு ஆராய்ச்சிக்காக \(1908\)ம் ஆண்டு நோபல்  பரிசைப் பெற்றார். \(1934\)ம் ஆண்டு முதன் முதலில் டிரிடியத்தைக் தயாரித்தார்.
 
தங்க தகடுசோதனை:
 
\(1905\) ஆம் ஆண்டு ரூதர்போர்டும் அவருடைய மாணவர்கள் ஹேன்ஸ் ஜெய்கர் மற்றும் எர்னஸ்ட் மார்ஷ்டன், தாம்சனுடைய மாதிரியை சரி பார்க்கும் முறையை ஆய்வு செய்தார்கள். தாம்சன் மாதிரியில் மின்னூட்டத் துகள்கள் சீர்மையாக பங்கிடப்பட்டுள்ளன என்பதை நினைவுப்படுத்திக் கொள்க.
 
ஒரு அணுவைவிட சிறியதான, அதிகப்படியான ஆற்றல் கொண்ட நேர்மின் துகளை ஒரு அணுவுடன் மோதும் படி செய்தால் நீ என்ன எதிர்பார்ப்பாய்? உள்ளே வரும் துகள் நேர்மின் சுமையை கொண்டிருப்பதால் அது நேர்மின் அணுவால் எதிர்க்கப்படும். வெளிவரும் பொருள் நேர் மின்னோட்டமாக இருந்தால் அவை ஒரே மின்னோட்டத்தைக் கண்டு எதிர் விலக்கமடையும்.
 
கேக் திராட்சை மாதிரியின் அடிப்படையில், அணுவில் நேர்மின் சுமை சீராகப் பங்கிடப்பட்டிருந்தால், அணுவன் உள்ளே ஒவ்வொரு புள்ளியிலும் அது மிகவும் சிறியதாக இருந்திருக்கும். உள்ளே வரும் துகளின் ஆற்றல் தொடர்பு புள்ளியின் விலக்கத்தை விட அதிகமாக இருப்பதால், அந்தத் துகள் விலக்கத்தை முறியடித்து அணுவினுள் ஊடுருவி இருக்க வேண்டும்.
 
YCIND20220728_4116_Atomic Structure_10.png
தங்க தகடுசோதனை
 
அணுவின் உள்ளே நேர் மின்னோட்ட துகளானது எல்லா பகுதிகளிலும் ஒரே அழுத்தத்துடன் செயல்படும். அணுவை சீரற்ற நகரும் எலக்ட்ரான்கள் கொண்ட ஒரு சீரான நேர்மின் சுமை கொண்ட நிறையாக உருவாக்கப்படுத்தினால், அந்தத் துகளானது அணுவின் அடுத்தப் பகுதியிலிருந்து எந்தவித விலக்கமும் அடையாமல் வெளியே வந்திருக்க வேண்டும்.
 
அணுவில் உள்ள சில எலக்ட்ரான்கள் நேர்மின் சுமைக் கொண்ட துகளை ஈர்த்தால் அதனுடைய பாதையில் சிறிய மாற்றததை ஏற்படுத்தும். இதிலிருந்து அறியப்படுவது என்னவென்றால், ஏதேனும் விலக்கம் இருந்தால் அது மிகவும் குறைந்த அளவினதாக கருதப்படும். எனவே அதை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை.
 
YCIND20220728_4116_Atomic Structure_08.png
துகள்கள் விலக்கமடைதல்