PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஜான் டால்டன் FRS என்ற  ஆங்கில வேதியிலாளர், இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர் ஆவார். நவீன அணுக்கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்ததற்காகவும் மற்றும் வண்ணக் குறைபாடு பற்றி ஆய்வு மேற்கொண்டதற்காகவும் அவர் பிரபலமானார். அவரைக் கௌரவிக்கும் வகையில் அவரது கொள்கையை டால்டனிஸம் என்று அழைப்பர். உங்களுக்கு ஏற்கனவே டால்டனின் அணுக்கொள்கை பற்றி அடிப்படை கருத்து, J.J தாம்ஸனின் கேத்தோடு கதிர் வினைகள் மற்றும் தாம்சன் அணு மாதிரியின் குறைபாடுகளைப் பற்றி தெரியும். இங்கு அவற்றை சிறிது நினைவு கூர்வோம்.
 
digitalmumiShutterstock2.jpg
டால்டன்
  
டால்டனின் கொள்கையின்படி,
  • ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய பிரிக்க முடியாத துகள்களான அணுக்களால் உருவாக்கப்பட்டது.
  • அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. 
  • ஒரு தனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லா வகையிலும் ஒரே மாதிரியாகவும் இருக்கும்.
  • வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எல்லா வகையிலும் வெவ்வேறாகவும் இருக்கும்.
  • ஒரு தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றும் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை (மூலக்கூறுகள்) உருவாக்கும். 
roseedabbasShutterstockw1024 (1).jpg
தாம்சன்
 
J.J தாம்சன் அணுமாதிரி பார்ப்பதற்கு கேக்கில் உலர் திராட்சை பொதிந்தது போல அல்லது தர்பூசனி பழத்தின் உள்ளாமைப்பு போல இருக்கும். அணுவானது நேர்மின்னூட்டம் கொண்ட கோளம். இக்கோளத்தினுள் எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் பொதிக்கப்பட்டுள்ளன.
 
Capture1w502 (1).jpg
தாம்சன் அணு மாதிரி
 
கதிரியக்கம்:
  
\(1896\)ம் ஆண்டு ஹென்றி பெக்கொரல் தன்னுடைய அலமாரியை ஒழுங்குப்படுத்தி கொண்டு இருந்தார். அப்பொழுது கருப்புத் தாளில் சுற்றப்பட்டிருந்த ஒளிப்படத் தகடும். யூரேனிய உப்பும் அருகில் வைக்கப்பட்டிருந்தன. சில நாட்கள் கழித்து, அந்த தகட்டை எடுத்து ஆய்வு செய்தார். அந்த ஒளிப்படத் தகடானது ஒளிக் கதிர்கள் படாமலேயே ஊடுருவும் கதிர்களால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதே ஆய்வை அவர் திரும்பவும் செய்து, யுரேனிய உப்பின் மூலம் அதிக ஊடுருவும் கதிர்கள் தன்னிச்சையாக வெளிப்படுவதை கண்டறிந்தார். அவைகளைத்தான், நாம் இன்று ஆல்ஃபா  துகள்கள் என்று கூறுகிறோம்.
 
YCIND20220728_4116_Atomic Structure_10.png
கதிரியக்கசோதனை
 
அணுக்களின் கதிரியக்கம் செயல் மூலமாக மூன்று வகையான α, β மற்றும் γ கதிர்கள் வெளிவருகின்றன. ஆல்ஃபா மற்றும் பீட்டா கதிர்கள் உண்மையான பருப்பொருள்களால் ஆனது. γ கதிர்கள் மின் காந்த அலைகள் ஆகும். ஆல்ஃபா கதிரியக்கத்தின் முக்கிய காரணியான ஆல்ஃபா துகள்கள் இரண்டு புரோட்டான் மற்றும் இரண்டு நியூட்ரானால் ஆனது. ஆல்ஃபா துகள்கள்ஹீலியத்தின் உட்கருவை ஒத்துள்ளது. எனவே ஆல்ஃபா துகளானது நேர்மின் அயனியை கொண்டுள்ளதால் நிறையில் ஹீலியம் அணுவுடன் ஒத்துள்ளது. பீட்டா துகள்கள்எதிர் மின் அயனியை கொண்டுள்ளதால் எலக்ட்ரானை ஒத்துள்ளது. காமாகதிர்கள்மின்சுமையற்றவை. அதாவது நடுநிலைமைக் கதிர்கள் ஆகும். ஆல்ஃபா துகள்களை பயன்படுத்திய ரூதர்ஃபோர்டு கண்டுபிடிப்புகளைப் பற்றி இங்கு காணலாம்.
 
YCIND20220728_4116_Atomic Structure_09.png
ஆல்ஃபா துகள் சோதனை