PDF chapter test TRY NOW
\(1792\) ஆம் ஆண்டு ஜெர்மியஸ் ரிச்சர் என்ற அறிவியலாளர் தலைகீழ் விகித விதியை பற்றி முதன் முதலில் கூறினார். இவ்விதியின் கூற்றானாது
இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மூன்றாவது தனிமத்துடன் சேரும் போது அவற்றின் நிறைகளின் விகிதம் சமமாகவோ அல்லது எளிய பெருக்கல் விகிதத்திலோ இருக்கும். இவ்விதி தலைகீழ் விகித விதி எனப்படும்.
எடுத்துக்காட்டக, இங்கு கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உடன் இணைந்து மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு, நீரையும் தருகின்றது.
தலைகீழ் விகித விதிகக்கான எடுத்துகாட்டு I
வ. எண் | சேர்மங்கள் | இணையும் தனிமங்கள் | இணையும் எடைகள் |
1 | \(CH_4\) | C-H | 12 - 4 |
2 | \(CO_2\) | C-O | 12 - 32 |
இதில் \(CH_4\) ல் நிறைகளின் விகிதம் C:H = \(3:1\)
\(CO_2\) ல் நிறைகளின் விகிதம் C:O = \(3:8\)
இங்கு ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் சம நிறையுள்ள கார்பன் உடன் இணைகின்றது. மேலும் அவை ஒன்றுடன் ஒன்று இனைந்து நீரிணை உருவாக்குகின்றது.
(\(H_2O\)) வில், H:O வின் நிறையின் விகிதம் என்ன? அது \(2:16\) அல்லது \(1:8\). இது \(4:32\) என்பதற்கு சமம். இந்த விகிதம் வெவ்வேறு நிறை கொண்ட ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அதே நிறையை கொண்ட கார்பனு்டன் இணைவதற்கு சமமாகும். இது தலைகீழ் விகித விதியை எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் ஒரு எடுத்துக்காட்டை இங்கு காணலாம். சல்ஃபர், ஆக்ஸிஜனு்டன் இனைந்து சல்ஃபர் டை ஆக்சைடை உருவாக்குகிறது. கார்பன் ஆக்ஸிஜனு்டன் இனைந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்குகிறது மேலும் கார்பன், சல்ஃபர் உடன் சேர்ந்து கார்பன் டை சல்பைடு உருவாக்குகின்றது.
தலைகீழ் விகித விதிகக்கான எடுத்துகாட்டு II
ஒரு குறிப்பிட்ட நிறைக்கொண்ட ஆக்ஸிஜனு்டன் (\(32\) பகுதிகள்) இணையும் கார்பன் மற்றும் சல்ஃபர் நிறைகளின் விகிதம் \(12:32\) அல்லது \(3:8\)..........(1)
\(CS_2\)-ல் கார்பன் மற்றும் சல்ஃபரின் நிறையின் விகிதம் \(12:64\) அல்லது \(3:16\)..........(2)
இரண்டு விகிதங்களும், (1) மற்றும் (2) ஒன்று்டன் ஒன்று தொடர்புடையது \(3/8\):\(3/16\) அல்லது \(2:1\).