PDF chapter test TRY NOW
பொருளின் நகரும் பாதையைப் பொருத்து அதன் இயக்கத்தை கீழ்க்காணுமாறு நாம் வகைப்படுத்தலாம்.
பொருளின் இயக்கம் நேர்கோட்டில் இருக்குமானால் அவை நேர்கோட்டு இயக்கம் எனப்படும்.
Example:
நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன்.
முன்னோக்கிச் சென்றுகொண்டு, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம் வளைவுப்பாதை இயக்கம் எனப்படும்.
Example:
வீசி எறியப்பட்ட பந்து.
பொருளின் இயக்கம் வட்டப்பாதையில் இருக்குமானால் அவை வட்டப்பாதை இயக்கம் எனப்படும்.
Example:
கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுழற்றப்படும் கல்லின் இயக்கம்.
ஒரு அச்சினைமையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம் தற்சுழற்சி இயக்கம் என்றழைக்கப்படுகிறது.
Example:
பம்பரத்தின் இயக்கம்.
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம்.
Example:
தனிஊசல் இயக்கம்
வெவ்வேறு திசையில் நகரும் பொருளின் இயக்கம்.
Example:
மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.
பொருளின் இயக்கத்தை அவை கடக்கும் தொலைவைக் கொண்டு இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவைகள் முறையே,
- சீரான இயக்கம்
- சீரற்ற இயக்கம்
ஒரு பொருள், சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்கின்றது எனில் அப்பொருளின் இயக்கத்தை சீரான இயக்கம் எனக் கூறலாம்.
Example:
பேருந்து ஒன்று, முதல் ஒரு மணி நேரத்தில் \(80\) கி.மீ தொலைவையும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் \(80\) கி.மீ தொலைவையும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் மேலும் \(80\)கி.மீ தொலைவையும் கடப்பதாகக் கொள்வோம்.
அதன் இயக்கம் எவ்வகையை சார்ந்தது?
பேருந்தானது, சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்கின்றது. எனவே, பேருந்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கம் ஆகும்
சீரான கால இடைவெளிகளின் அளவு மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கலாம்.
சீரற்ற இயக்கம்:
ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அப்பொருள் சீரற்ற இயக்கத்தில் இயங்குகிறது எனலாம்.
Example:
ஒரு மகிழுந்து வீட்டிலிருந்து புறப்படுவதாக கருதுவோம். கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் அது மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த காரணத்தினால் மகிழுந்து \(5\) நிமிடத்தில் \(500\) மீ தொலைவை மட்டுமே கடக்கிறது. அப்பகுதியைக் கடந்து வெளியே வந்த பிறகு, சாலையில் வாகன நெரிசல் இல்லாததால் அதன் வேகம் அதிகரித்து, \(5\) நிமிடத்தில் \(4\) கி.மீ தொலைவைக் கடக்கிறது.
அதன் இயக்கம் எவ்வகையை சார்ந்தது?
மகிழுந்தின் இயக்கத்தை சீரற்ற இயக்கம் எனக் கூறலாம். ஏனெனில், அது சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்துள்ளது.