PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தடையின்றி தானே விழும் பொருளின் இயக்கத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள ஒரு சில செயல்பாடுகளை கீழே காணலாம். 
 
1. ஒரு பெரிய கல் மற்றும் ஒரு சிறிய அழிப்பான் இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு மேசையின் மீது நின்று கொண்டு அந்த இரண்டு பொருட்களையும் ஒரே உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே விட வேண்டும்.
 
நீங்கள் காண்பது என்ன?
 
கல் மற்றும் அழிப்பான் இரண்டும் பூமியின் மேல்பரப்பை சற்றேறக்குறைய ஒரே நேரத்தில் வந்தடைந்தடைகிறது.
 
2. ஒரு சிறிய அழிப்பான் மற்றும் ஒரு காகிதத் தாள் இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மேசையின் மீது நின்று கொண்டு அந்த இரண்டு பொருட்களையும் ஒரே உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே விட வேண்டும்.
 
இப்பொழுது என்ன காண்கிறீர்கள்?
 
அழிப்பான் மற்றும் காகிதத் தாள் இரண்டும்  கீழே விழும் பொழுது அழிப்பான் முதலில் தரையை வந்தடைகிறது. பின்பு காகிதத்தாள் தரையை வந்தடைகிறது.
 
3. சமமான நிறையுடைய இரண்டு காகிதத் தாள்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்றை மட்டும் கசக்கி பந்து போல் சுருட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இரண்டையும் ஒரே உயரத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே விட வேண்டும்.
 
இங்கு நீங்கள் காண்பது என்ன?
 
காகிதத்தாளும், பந்துபோல் சுருட்டப்பட்ட காகிதமும் ஒரே எடையைப் பெற்றிருந்த போதும், பந்து போல் சுருட்டப்பட்ட காகிதம் முதலில் தரையை வந்தடைகிறது, பின்பு காகிதத் தாள் இரண்டாவதாக  தரையை வந்தடைகிறது. 
 
இதற்கான காரணம் என்ன?
 
காற்றில்லாத வெற்றிடத்தில் மேற்சொன்ன அனைத்துப் பொருட்களும் ஒரே நேரத்தில் தரையை வந்தடையும். ஆனால், காற்று ஊடகத்தில் காற்றின் உராய்வு விசையானது தடையின்றி தானே விழும் பொருளின் மீது ஒரு தடையை ஏற்படுத்தும்.
 
எனவே அழிப்பான் மற்றும் கல்லின் மீது செயல்படும் இந்த காற்றுத்தடை புவிஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும்போது புறக்கணிக்கத்தக்க அளவு உள்ளது. எனவே, காற்று ஊடகத்தில், அவையிரண்டும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் தரையை வந்தடைகின்றன.
  • இந்த செயல்பாடுகளின் மூலம், காற்றுத் தடையின் அளவானது, பொருளின் பரப்பளவைப் பொறுத்துள்ளது என்று தெளிவாகிறது. 
  • தடையின்றி கீழே விழும் பொருட்கள் முடுக்கமடையும் ஆனால், இந்த முடுக்கம் பொருளின் நிறையைப் பொருத்தது இல்லை.
உள்ளீடற்ற பொருள் அல்லது திடப்பொருள் மற்றும் சிறிய அல்லது பெரிய பொருட்கள் அனைத்தும் ஒரே கால வீதத்தில் கீழே விழும்.
முடுக்கம் ‘\(a\)’ க்குப் பதிலாக புவிஈர்ப்பு முடுக்கம் ‘\(g\)’ ஐப் பிரதியிடுவதால், தடையின்றி தானே கீழே விழும் பொருட்களுக்கான சமன்பாடுகளைப் பெற முடியும்.
 
\(a\) \(=\) \(g\) --------------- (\(A\))
 
தடையின்றி தானே விழும் பொருட்களுக்கு அதன் ஆரம்பத் திசைவேகம்
 
\(u\) \(=\) \(0\) --------------- (\(B\))
 
எனவே, கீழ்க்காணும் சமன்பாடுகளைப் பெற முடியும்.
 
முதல் இயக்கச் சமன்பாடு
 
v = u + at ------------------- (\(1\))
 
 சமன்பாடு (\(A\)) மற்றும் (\(B\))யை சமன்பாடு (\(1\)) ல் பிரதியிடவும்,
 
v=gt ____________(\(2\))
 
இரண்டாம் இயக்கச் சமன்பாடு
 
S = ut + 12at2 ------------- (\(3\))
 
சமன்பாடு (\(A\)) மற்றும் (\(B\))யை சமன்பாடு (\(3\)) ல் பிரதியிடவும்,
 
 S=12gt2 _____________ (\(4\))
 
மூன்றாம் இயக்கச சமன்பாடு,
 
v2=u2+2as --------------- (\(5\))
 
சமன்பாடு (\(A\)) மற்றும் (\(B\))யை சமன்பாடு (\(5\)) ல் பிரதியிடவும்,
 
v2=2gh ______________ (\(6\))
 
ஒரு பொருளை மேல்நோக்கி எறியும் பொழுது அது, புவியீர்ப்பு விசைக்கு எதிர்த்திசையில் செல்லும். எனவே, ‘\(a\)’ க்கு பதிலாக \(-g\) என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்நோக்கிச் செல்லும்போது, \(+g\) என எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
Important!
ஒரு பொருள் சுழி திசைவேகம் மற்றும் வரையறுக்கப்பட்ட முடுக்கத்தைக் கொண்டிருக்க முடியுமா?
 
ஆம், ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், பொருளின் திசைவேகம் படிப்படியாகக் குறைந்து, பெரும உயரத்தை அடைந்த நிலையில் சுழி மதிப்பைப் பெறும். அப்போது அப்பொருளின் முடுக்கம் புவிஈர்ப்பு முடுக்கத்துக்குச் சமமாக இருக்கும்.