PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஆவர்த்தன அட்டவணையின் குறைபாடுகள்:
  • பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன. எ.கா.: கடின உலோகங்களாகிய செம்பு மற்றும் வெள்ளி, மென் உலோகங்களாகிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
  • ஹைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட முடியவில்லை. அலோகமாகிய ஹைட்ரஜன், மென் உலோகங்களாகிய லித்தியம், சோடியம் மற்றும் பொட்டா சியம் போன்றவற்றுடன் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
  • அதிகரித்துக்கொண்டே செல்லும் அணு நிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடியவில்லை. எ.கா.: Co & Ni, Te & I.
  • ஐசோடோப்புகளுக்கு என தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை.
ஜெர்மானியத்தின் பண்பு:
  
தனிமங்கள்
மெண்டெலீவின்
முன்னறிவிப்பு (1871)
உண்மை பண்பு
(1886)
அணு நிறை
72
72.59
ஒப்படர்த்தி
5.5
5.47
நிறம்
அடர்
சாம்பல்
அடர் சாம்பல்
ஆக்ஸைடின் குறியீடு
EsO_2
GeO_2
குளோரைடின் தன்மை
EsCl_4
GeCl_4
 
நவீன கால தனிம வரிசை அட்டவணை:
 
1913 ஆம், ஆண்டு ஆங்கிலேய இயற்பியலாளர் ஹென்றி மோஸ்லே என்பவர் தன்னுடைய X-கதிர் சிதைவு ஆய்வு மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர அவற்றின் நிறையைப் பொறுத்து இருக்காது என்று நிரூபித்தார். இதன் மூலம் நவீன கால தனிம வரிசை அட்டவணையானது அணு  எண்ணின் ஏறு வரிசையில் அமைக்கப்பட்டது.
 
இந்த நவீன கால அட்டவணை மெண்டலீஃப் அட்டவணை யின் ஒரு விரிவு படுத்த பட்டதேயாகும். மெண்டலீஃப் அட்டவணை குறும் அட்டவணை என்றும் நவீன அட்டவணை நீண்ட அட்டவணை என்றும் அறியப்படுகிறது.