PDF chapter test TRY NOW
உடலுக்குத் தேவையான மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து புரதம் ஆகும். மேலும் இது உடலின் கட்டுமான பொருள் ஆகும்.
Important!
புரதங்கள் "கட்டுமான தொகுதிகள்" என்று அழைக்கப்படும்.
புரதங்கள் கார்போஹைட்ரேட்டுகளை விட மிகவும் சிக்கலான கட்டமைப்பை உடையது.
புரதம் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகியவற்றால் ஆனது.
Example:
முட்டை வெள்ளைக் கரு, பருப்புகள், பால், கோழி, மீன், சோயா பீன்ஸ், முளைக்கட்டிய பயிறுகள், கொட்டைகள்.
புரத உணவுகள்
Important!
ஒரு மனிதனுக்குத் தினசரி புரதம் \(40\) கிராம் தேவைப்படும்.
புரதத்தின் பயன்கள்:
- உடல் வெப்பம் சீராக இருக்க உதவுகின்றது.
- உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று புரதம் ஆகும்.
- மனித உடலில் எளிதான செரிமானம் நடைபெற இவை உதவுகின்றது.
- உடல் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
நம் உடலுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உடலில் எந்த பகுதியிலும் உருவாக்கப்படுவது இல்லை. அவற்றை நாம் உணவின் மூலமாகவே பெற இயலும்.
நம் உடலில் மொத்தமாக 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் (EAA- Essential Amino Acids) உள்ளன. அவை பின்னே வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
- ஃபினைல் அலனைன்
- வேலைன்
- திரியோனைன்
- டிரிப்டோஃபேன்
- மெத்தியோனைன்
- லுசைன்
- ஐசோலுசைன்
- லைசின்
- ஹிஸ்டிடைன்
இதைத் தவிர்த்து அத்தியாவசியம் இல்லாத அமினோ அமிலங்களும் உள்ளன. மொத்தம் \(11\) அத்தியாவசியம் இல்லாத அமினோ அமிலங்கள் உள்ளன.
- அர்ஜினைன்
- அலனைன்
- அஸ்பார்டிக் அமிலம்
- அஸ்பாரஜின்
- சிஸ்டைன்
- குளுட்டமைன்
- குளுடாமிக் அமிலம்
- கிளைசின்
- புரோலைன்
- செரின்
- டைரோசின்