PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வைட்டமின் C:
 
வைட்டமின் \(C\ \)உடலில்  நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், பலமான பல் ஈறுகளுக்காகவும் மிகத் தேவையான ஊட்டச்சத்து ஆகும். மேலும், இது முக்கியமாக செல்களின் வளர்ச்சி மற்றும் பழுதடைந்த செல்களை சீரமைக்கவும் தேவைப்படுகிறது.
 
shutterstock362885486w400.jpg
வைட்டமின் C உணவு மூலங்கள்
வைட்டமின் \(C\) அஸ்கார்பிக் அமிலம் எனவும் அழைக்கப்படும்.
உணவு வகைகள்:
 
Important!
முக்கியமாக நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட \(20\) மடங்கு அதிக அளவில் வைட்டமின் \(C\) உள்ளது.
வைட்டமின் \(C\) அதிக அளவில் நெல்லிக்காய், ஆரஞ்சு, பச்சை மிளகாய், தக்காளி, இலை வகை காய்கறிகள், முளைக் கட்டிய தானியங்கள் மற்றும் சிட்ரஸ் பழங்கள்  ஆகியவற்றில் காணப்படுகிறது.
 
குறைபாட்டு நோய்: ஸ்கர்வி
 
அறிகுறிகள்:
  • ஈறுகளில் இரத்தம் வழிதல்
  • ஈறு வீக்கம்
  • புண்கள் குணமாகத் தாமதம் ஆகுதல்
  • பல், எலும்பு சார்ந்த குறைபாடுகள்
ஜேம்ஸ் லின்ட்:
 
இவர் \(1976\)-ம் ஆண்டு ஈடின்பெர்க் என்னும் நகரத்தில் பிறந்த வேதியியலாளர் ஆவார்.
 
1024pxPortraitofJamesLind17161794PhysicianatHaslarWellcomeM0003113w300.jpg
ஜேம்ஸ் லின்ட்
 
ஜேம்ஸ் லின்ட் "கடற்படை மருத்துவர்களின் தந்தை" என்று அழைக்கப்படுபவர்.  இவர் அந்த நாட்டின் கடற்படையில் அறுவை சிகிச்சை நிபுணர் பணியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார்.
 
91097645jameslindw400.jpg
ஜேம்ஸ் மாலுமிகளுக்குச் சிகிச்சை அளித்தல்
 
அப்போது மாலுமிகள் ஒரு புதிய நோயினால் பாதிக்கப்படுவதைக்  கண்டறிந்தார். ஜேம்ஸ் அது என்ன நோய் என்பதைக் கண்டறிய முற்பட்டதன் விளைவாக அது  ஸ்கர்வி நோய் எனக் கண்டறியப்பட்டது.  அந்த காலகட்டத்தில் பல ஆயிரம் மக்களின் உயிரைக் குடித்த கொடூர நோயை அவர் கண்டுபிடித்தார். அதோடு, அதற்குத் தீர்வு கண்டு பிடிக்கவும் முனைந்தார்.
 
Important!
ஐந்து வெவ்வேறு பொருட்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தார். அவை சிட்ரஸ் பழங்கள், வினிகர், செடார், கடல் நீர், நீர்த்த சல்பூரிக் அமிலம், பூண்டு-கடுகு விழுது மற்றும் காய்ந்த முள்ளங்கி வேர்.
  • சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு பருகியவர்கள் உடல் நலம் பெற்றதைக் கவனித்தார்.
  • ஸ்கர்வி என்னும் உயிர் குடிக்கும் நோய்க்கு வைட்டமின் \(C\) தீர்வாக அமையும் எனக் கண்டு பிடித்த மருத்துவர் ஜேம்ஸ் லின்ட் ஆவார்.