PDF chapter test TRY NOW
உயிரினங்கள் அனைத்தும் தாங்கள் உயிர் வாழத் தேவையான பலதரப்பட்ட உயிரியல் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்து தாது உப்புக்களாகும். தாது உப்புக்கள் கரிம பொருட்கள் எனப்படும். உடலின் பல்வேறு பாகங்களான பற்கள், எலும்புகள், இரத்தம், தசை மற்றும் நரம்பு செல்களில் இவை உள்ளன.

தாது உப்புக்கள்
தாது உப்புக்கள் பின்வருமாறு இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
- பெரும் தனிமங்கள்
- குறைவாகத் தேவைப்படும் தனிமங்கள் (trace elements)
பெரும் தனிமங்கள் :
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- பொட்டாசியம்
- சோடியம்
- மெக்னீசியம்
குறைவாகத் தேவைப்படும் தனிமங்கள் :
- கந்தகம்
- இரும்பு
- குளோரின்
- கோபால்ட்
- தாமிரம்
- துத்தநாகம்
- மாங்கனீசு
- மாலிப்டினம்
- அயோடின்
- செலீனியம்
பெரும் தனிமச்சத்துகள்:
கால்சியம்:
உடலில் பலமான எலும்புகளுக்கு, காயம் பட்ட பின்னர் இரத்தம் உறைதலுக்கு, பற்களின் எனாமல் சீராக இருக்க, உடலில் வலுவான நரம்பு மண்டலம் அமைய மிகவும் தேவையான ஊட்டச்சத்து கால்சியம் ஆகும்.
கால்சியம் நிறைந்த உணவுகள்:
பால், தயிர், பாலாடைக் கட்டி, கொட்டை வகைகள், முட்டைகோஸ், மீன்.

கால்சியத்தின் உணவு மூலங்கள்
குறைபாட்டு நோய்கள்:
- எலும்பு வளர்ச்சி குன்றுதல்
- குறைந்த எலும்பு சட்டக வளர்ச்சி
- எலும்புத்துளை நோய்
பாஸ்பரஸ்:
உடலில் செல் மற்றும் திசு சீரமைப்பு, பலமான எலும்புகள் ஆகியவற்றுக்கு பாஸ்பரஸ் மிகவும் தேவை.
பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்:
இறைச்சி, கொட்டை வகைகள், பீன்ஸ், பால் பொருட்கள், முழு தானியங்கள்.

பாஸ்பரஸ் உணவு மூலங்கள்
சோடியம்:
உடலில் அமில-கார சமநிலையைச் சீராக வைத்தல், நரம்புகளில் உணரும் திறனைக் கடத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு சோடியம் அவசியமான ஒன்றாகும்.
சோடியம் நிறைந்த உணவுகள்: சாதாரண உப்பு
குறைபாட்டு நோய்: தசைப் பிடிப்பு மற்றும் நரம்பு தூண்டல் கடத்த முடியாமை
பொட்டாசியம்:
நரம்பு திறன் மற்றும் தசைகளின் செயல் திறனை ஒழுங்குபடுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு இது மிகவும் அவசியம் ஆகும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்:
வாழைப்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கொட்டைகள், முழு தானியங்கள், சிட்ரஸ் வகைப் பழங்கள்.
குறைபாட்டு நோய்கள்: நரம்பு தூண்டல் கடத்த இயலாமை மற்றும் தசை சோர்வு
நுண்ணிய தனிமச்சத்துகள்:
அயோடின்:
தைராய்டு ஹார்மோன் உற்பத்தி போன்றவற்றிற்குத் தேவை.
அயோடின் நிறைந்த உணவுகள்:
இறால், டியுனா மீன், கடல் பாசி, சாதாரண உப்பு

அயோடின் உணவு மூலங்கள்
குறைபாட்டு நோய்: முன் கழுத்து கழலை
இரும்புச்சத்து :
உடலில் ஹீமோகுளோபினின் உற்பத்தி, இரத்த விருத்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு இரும்புச்சத்து தேவைப்படுகின்றது.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்:
பசலைக்கீரை, பேரீச்சம்பழம், கீரைகள், பிராக்கோலி, முழு தானியங்கள், கொட்டைகள், மீன், கல்லீரல்.

இரும்புச்சத்தின் உணவு மூலங்கள்
குறைபாட்டு நோய்: இரத்த சோகை