PDF chapter test TRY NOW
ஒரு மனிதன் தினமும் உண்ணும் உணவில் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துகள் இல்லாமல் போவதால் ஏற்படும் நோய்கள் குறைபாட்டு நோய்கள் எனப்படும். மேலும், இந்த நிலை "ஊட்டச்சத்துக் குறைபாடு" எனக் குறிக்கப்படுகின்றது.
குறைபாட்டு நோய்களின் காரணங்கள்:
- சரிவிகித உணவு உண்ணாமை
- வறுமை
- உணவு தட்டுப்பாடு
- உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள்
- குறைபாட்டு நோய் குறித்த விழிப்புணர்வின்மை
- உணவு பாதுகாப்பின்மை
புரதக்குறைபாட்டினால் குவாசியோர்கர் (Kwashiorkar) மற்றும் மராஸ்மஸ் (Marasmus) நோய்கள் ஏற்படுகின்றன.
குவாசியோர்கர் (Kwashiorkar):
- இது முக்கியமாகக் குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு குறைபாட்டு நோய் ஆகும்.
- குழந்தைகளில் \(1\)-\(5\) வயதுள்ளவர்களை அதிகமாகத் தாக்கும்.
- நீண்ட காலமாகக் குழந்தைகள் உண்ணும் உணவில் புரதம் இல்லாமல் போவதே இந்த நோய்க்கான காரணமாகும்.
- அதாவது அவர்கள் உணவில் கார்போஹைட்ரேட் இருக்கும் ஆனால், புரதம் இருக்காது அல்லது மிகக் குறைந்த அளவே காணப்படும்.
குவாசியோர்கர்
அறிகுறிகள்:
- கை, கால் வீக்கம்
- முகம் வீங்குதல்
- வயிற்றுப்போக்கு
- வயிறு பெரிதாகுதல்
- குன்றிய உடல் வளர்ச்சி
- கல்லீரல் வீக்கம்
மராஸ்மஸ் (Marasmus):
- இது குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைத் தாக்குகின்றது.
- அவர்களின் உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு மிகக்குறைந்த அளவே இருக்கும்.
மராஸ்மஸ்
அறிகுறிகள்:
- மெதுவான உடல் வளர்ச்சி
- மெல்லிய தேகம்
- எடை குறைதல்