PDF chapter test TRY NOW
உணவுப் பாதுகாப்பு செயல்பாடுகளில், செயற்கை உணவுப் பாதுகாப்பு பொருட்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.
செயற்கையாக உருவாக்கப்படும் உணவு பாதுகாப்பு பொருட்கள், உணவின் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. அவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம்.
- சிட்ரிக் அமிலம்
- சோடியம் பென்சோயேட்
- வினிகர்
- சோடியம் மெட்டா பைசல்பேட்
- பொட்டாசியம் பைசல்பேட்
மேலே குறிப்பிட்டு உள்ள செயற்கை உணவு பாதுகாப்பு பொருட்கள் பின்வரும் உணவுகளில் அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்த சேர்க்கப்படுகின்றன.
- சாஸ்
- ஜாம்
- ஜெல்லி
- துரித உணவுகள்
- பதப்படுதப்பட்ட உணவுகள்
செயற்கை பாதுகாப்பு பொருட்கள் உள்ள உணவுகள்
இவை உணவுகளில் சிறிது அளவு மட்டுமே சேர்க்கப்படும். இந்த செயற்கை வேதிப் பொருட்கள் உணவில் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினை மற்றும் வளர்ச்சியினை குறைக்கும். மேலும், உணவினை நீண்ட காலம் அவற்றின் தன்மை மாறாமல் பாதுகாக்கவும் உதவுகின்றன.
Important!
உலக உணவு தினம்: அக்டோபர் \(16\)
இந்த நாளில் உணவினை பாதுகாத்தல் குறித்தும் உணவு கேட்டு போவதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும் வலியுறுதப்படுகின்றது.
\(1945\)-ம் ஆண்டு துவங்கப்பட்ட உணவு மற்றும் விவசாய அமைப்பின் துவக்க நாளினை கொண்டாட உலக உணவு தினம் அனுசரிக்கப்படுகின்றது. மேலும், இந்த தினத்தில் உணவினை வீணடிப்பதன் விளைவுகள் குறித்தும் மேலும், உலக மக்களின் பசி பிணியை போக்குதல் என்பது போன்ற பல விழிப்புணர்வு முகாம்கள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.