PDF chapter test TRY NOW
இந்த படத்தை கவனியுங்கள். இதில் பாலும் நீரும் உள்ளது. பாலில் நீரை கலப்பது கலப்படம் எனப்படும். பாலில் கலக்கப்படும் நீர் கலப்படப் பொருள் எனப்படும்.
பாலில் நீர் கலப்படம் செய்தல்
கலப்படம் என்பது நாம் உண்ணும் உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்த்தலோ அல்லது தேவையான ஒரு பொருளை நீக்குதலோ ஆகும்.
Example:
பாலில் நீர், தேனில் சர்க்கரைப்பாகு, காபித்தூளில் புளியங்கொட்டை தூள் ஆகியவை சிலக் கலப்படங்கள் ஆகும்.
கலப்பட பொருள் என்பது உணவு கலப்படத்திற்காக உபயோகிக்கும் பொருள் ஆகும். அதாவது உணவில் தேவை இல்லாமல் சேரக்கப்படும் பொருள் ஆகும். இது, உணவின் அளவை அதிகரித்து உணவின் தரத்தை குறைத்து விடும் தன்மை கொண்டது ஆகும்.
பொதுவாக கலப்படத்திற்கு உட்படுத்தப்படும் உணவு பொருள்கள் பின்வருமாறு,
- பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
- தானியங்கள்
- பருப்பு வகைகள்
- காபி மற்றும் தேயிலைத் தூள்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- குங்குமப்பூ
- தேன்
- இனிப்பு பண்டங்கள்
- எண்ணெய் வகைகள்
- இறைச்சி
- கோழிப்பண்ணை மற்றும் சார்ந்த பொருட்கள்
மேலும், உணவு கலப்பட பொருட்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படும்.
- இயற்கையான கலப்படப் பொருட்கள்
- தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப் பொருட்கள்
- தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருட்கள
உணவு கலப்படத்தின் காரணங்கள்
- அதிக லாபம் மற்றும் பொருளாதார நோக்கத்திற்காக செய்யப்படுதல்.
- உணவின் அளவை அதிகரிக்க கலப்படம் செய்தல்.
- உணவின் விலையை குறைத்து லாபத்தை கூட்ட கலப்படம் செய்தல்.
- குறைந்த விலை மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்க்க செய்தல்.
- பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.