PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகலப்படப் பொருட்கள் மூன்று வகைப்படும் என்பதை நாம் அறிவோம். அவற்றில் முதல் இரு வகைகள் குறித்து பின்வருமாறு காணலாம்.
இயற்கையான கலப்படப் பொருள்கள்
உணவில் எவ்வித வெளி சம்மந்தம் இல்லாமல் இயற்கையாகவே இருக்கும் சில பொருள்கள் (வேதிப்பொருள்கள் அல்லது கரிமப்பொருள்கள்) இயற்கையான கலப்பட பொருள்கள் எனப்படும்.
Example:
ஆப்பிள் மற்றும் செர்ரி விதையில் உள்ள புரூசிக் அமிலம், சில காளான்களில் உள்ள நச்சு பொருள்கள், கடல் நச்சுக்கள், மீன் எண்ணெய் நச்சுப்படுதல், சுற்றுப்புற மாசு.
தற்செயலாக / தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்
உணவுப் பொருளை கையாளும் போது கவனக்குறைவால் சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் உணவினை கலன்களில் அடைக்கும்போது அறியாமல் சேர்க்கப்படும் பொருள்கள் தற்செயலாக / தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள் எனப்படும். அவற்றில் சில பின்னே கொடுக்கப்பட்டு உள்ளன.
- பூச்சிக்கொல்லி மருந்துகளில் எஞ்சியவை.
- கொரிக்கும் பிராணிகள் அல்லது பூச்சிகளின் மல ஜலங்கள் விழுதல்
- உணவினை எலிகள் கடித்தல்
- உணவில் லார்வாக்கள் தோன்றுதல்
- எஸ்செரிச்சியா கோலை, சால்மோனல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் கனிகள், காய்கள், இறைச்சி, கோழிப்பண்ணை சார்ந்த உணவில் இருத்தல் உணவை கெட்டுப்போக செய்தல்.
- டின் கலன்களில் உணவுகளில் உள்ள உலோகம் உணவில் கலத்தல்.
- அர்செனிக், லெட், மெர்குரி போன்ற உலோக மாசுபடுதல் உணவில் ஏற்படுதல்.