PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உணவில் சுகாதாரம் இல்லை என்றால் வெகு சீக்கிரமாக நுண்ணுயிரிகள் உணவினை கெட்டுப்போக செய்து விடும். அதன் பின்னர் அந்த உணவானது உண்ணுவதற்கு ஏற்ற நிலையில் இருக்காது, மேலும் அந்த உணவை நாம் உண்ணும் போது உடலில் பல உபாதைகள் ஏற்படலாம்.
உணவுக் கெட்டுப்போதல் என்பது உண்ணும் உணவில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம் ஆகும். உணவினை உட்கொள்ள முடியாத நிலையில் அந்த உணவானது கெட்டுப்போனதாக கொள்ளப்படும்.
உணவு கேட்டுப்போதலின் அறிகுறிகள்
 
பின்வரும் விசயங்களில் ஏற்படும் மாற்றங்கள் உணவின் நிலையை அறிய உதவும். அவை பின்னே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
  • தோற்றம்
  • நிறம்
  • தன்மை
  • மணம்
  • சுவை
இவற்றில் ஏற்படும் மாற்றமே உணவு கேட்டுபோதலின் அறிகுறிகளை நாம் தெளிவாக அறிய உதவும் காரணிகள் ஆகும்.
Example:
பாக்டீரியா, பூஞ்சை போன்றவை உணவினைக் கெட்டுப்போக வைக்கும் நுண்ணுயிரிகள் ஆகும்.
உள்காரணிகள்
  • உணவில் உள்ள நொதிகளின் செயல்பாடு
  • உணவில் காணப்படும் ஈரப்பதம்
FotoJet.png
உணவு கெட்டுப்போதல்
  
வெளி காரணிகள்
  • உணவில் கலப்படம் செய்தல்.
  • சுத்தம் இல்லாத பாத்திரங்கள் மற்றும் சாதனங்களை உணவு சமைக்க உபயோகப்படுத்துதல்.
  • சுகாதாரம் இல்லாத சாதனங்கள் உபயோகப்படுத்துதல்.
  • உணவைச் சேமிக்க போதிய வசதி இல்லாமல் போதல்.
  • எலிகள் மற்றும் பூச்சிகளால் அசுத்தம் ஏற்படுதல்.