PDF chapter test TRY NOW
மனிதன் உண்ணத் தேவையான உணவினை எதிர்கால பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சரியாக சேமித்து வைத்தல் மிகவும் அவசியம் ஆகும்.
உணவு பாதுகாப்பு முறை என்பது நாம் உண்ணுவதற்கு ஏற்ற நிலையில் உணவை அழுகாமல் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் முறை ஆகும்.
பின்வரும் காரணங்களுக்காக, நாம் உணவுப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- உணவு சேமிப்பு காலத்தை அதிகரிக்கவும்,
- உணவின் தன்மை, மணம், நிறத்தை நிலைநிறுத்தவும்,
- உணவில் உள்ள ஊட்டச்சத்தின் மதிப்பு மாறாமல் காக்கவும்,
- மக்களுக்கு உணவு வழங்குதலை அதிகரிக்கவும்,
- உணவு வீணாதல் பெருமளவில் குறைக்கப்படுவதற்கும்,
- உணவினை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைப்பதற்கும்,
உணவுப் பாதுகாப்பு முறைகள்
- உலர்த்தல்
- புகையிடுதல் அல்லது புகையூட்டல்
- கதிரியக்கம்
- குளிர் முறை பாதுகாப்பு
- உறைய வைத்தல்
- பாஸ்டர் பதனம்
- கலங்களில் அடைத்தல்
நாம் பின்வரும் பகுதிகளில், அனைத்து முறைகளைப் பற்றியும் விரிவாகக் காணலாம்.
1. உலர்த்தல்
உணவில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலுமாக நீக்கி உணவைப் பாதுகாக்கும் முறை உலர்த்தல் எனப்படும்.
இந்த முறை பாக்டீரியா, ஈஸ்ட், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றது.
i. சூரிய ஒளி பயன்பாடு - சூரிய ஒளியைப் பயன்படுத்தி சில உணவு வகைகள் உலர்த்தப்படுகின்றன.
சூரிய ஒளியில் அப்பளம் உலர்த்தல்
ii. வெற்றிட உலர்த்தல் - ஆக்ஸிஜன் இல்லாத ஒரு வெற்றிடத்தில் உணவானது உலர்த்தப்படும்.
வெற்றிட உலர்தல் செய்த உணவு
iii. சூடானகாற்று - குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் சூடான காற்று செலுத்தப்பட்டு உணவு உலர்த்தப்படும்.
சூடான காற்று மூலம் உணவு உலர்தல்
2. புகையிடுத்தல் அல்லது புகையூட்டல்
உணவின் மேல் பரப்பி விடப்படும் புகையினால் உணவின் தன்மை பாதுகாக்கப்படுகின்றது. மேலும், சில சிறப்புமிக்க மரக்கட்டைகள் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த புகையானது உணவிற்கு ஒரு தனி மணம் மற்றும் சுவையை தருகின்றது. மேலும் இது உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி உணவு நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கும் முறை ஆகும்.
புகையிடுதல் முறையில் பாதுகாத்தல்
3. கதிரியக்கம்
x -கதிர்கள், காமா கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் போன்ற அயனியாக்கும் கதிர்கள் உணவின் உள்ளே செலுத்தப்படும். அவை உணவினை கெடுக்கும் கெட்ட நுண்ணுயிரிகளையும், பூச்சிகளையும் கொன்று உணவை பாதுகாக்கும்.
கதிரியக்கம் மூலம் பாதுகாத்தல்