PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இந்த பக்கத்தில் இரண்டு கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலை பற்றி அறிந்து கொள்வோம்.
விளக்கம்:
A மற்றும் B கணங்களை  கருத்தில் கொள்வோம்.
 
இங்கே A என்பது 1, 2 மற்றும் 3 என்ற சிறுவர்களின் கணம் ஆகும்.
 
அதாவது, A = \{1,2,3\}.
 
மற்றும் B என்பது a, b மற்றும் c என பெயரிடப்பட்ட சிறுமிகளின் கணம் ஆகும்.
 
அதாவது, B = \{a,b,c\}.
 
அம்புக்குறி வரைபடத்தைப் பயன்படுத்தி நடன நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு சிறுவனயும் ஒரு சிறுமியுடன் இணைப்பதற்கான சாத்தியமான வழிகளைப் பார்ப்போம்.
 
1.png
 
கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி நாம் 9 வெவ்வேறு சோடிகளைத் தேர்ந்தெடுக்கலாம்:
 
(1,a), (1,b), (1,c), (2,a), (2,b), (2,c), (3,a), (3,b), (3,c)
 
இங்கே, இந்த சோடிகள் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலை குறிக்கின்றன.
 
மேலே உள்ள விளக்கத்தின் அடிப்படையில், A மற்றும் B கண்களின் கார்ட்டீசியன் பெருக்கலை பின்வருமாறு வரையறுப்போம்::
வரையறை:
A மற்றும் B என்பன இரண்டு வெற்றில்லா கணங்கள் எனில், இவற்றின் வரிசைச் சோடிகளின் கணமானது (a, b) அதாவது  a\in A , b\in B என இருக்கும். இதை  A மற்றும் B-யின்
கார்டீசியன் பெருக்கல் என்கிறோம். எனவே, A\times B  ́= \{(a, b )| a ∈ A, b ∈B  \} . A\times B என்பதை (A கிராஸ் B) எனப் படிக்கவும்.
Important!
  • A × B என்பது, A மற்றும் B என்ற கணங்களுக்கிடையேயான அனைத்து வரிசைச் சோடிகளின் கணம் எனில், அதன் முதல் உறுப்பு A-யின் உறுப்பாகவும், இரண்டாவது உறுப்பு B-யின் உறுப்பாகவும் இருக்கும்.
  • B × A என்பது, A மற்றும் B என்ற கணங்களுக்கிடையேயான அனைத்து வரிசைச் சோடிகளின் கணம் எனில், முதல் உறுப்பு B-யின் உறுப்பாகவும் இரண்டாவது உறுப்பு A-யின் உறுப்பாகவும் இருக்கும்.
  • a = b எனில், (a,b)=(b,a).
  • A, B மற்றும் C ஆகிய மூன்று கணங்களுக்கும், பின்வரும் பண்புகள் உண்மையாக இருக்கும்.
  1. A \times (B \cup C) = (A \times B) \cup (A \times C) (சேர்ப்பு மீதான பங்கீட்டு பண்பு).
  2. A \times (B \cap C) = (A \times B) \cap (A \times C) (வெட்டு மீதான பங்கீட்டு பண்பு).