PDF chapter test TRY NOW

மூன்று மற்றும் நான்கு அடுத்தடுத்த எண்கள்:
  
அடுத்தடுத்த எண்கள் கூட்டுத் தொடர் வரிசையில் அமைவதைப் பற்றி பார்க்கலாம்.
அடுத்தடுத்த மூன்று எண்கள் கூட்டுத் தொடர் வரிசையில் அமைந்தால்  அவை, a - d, a மற்றும் a + d என்று அமையும். இங்கு, பொது வித்தியாசம் d
Example:
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமைந்த மூன்று அடுத்தடுத்த எண்களின் கூடுதல் 24 மற்றும் அதன் பொது வித்தியாசம் 4 எனில் கூட்டுத் தொடர் வரிசையைக் காண்க.
 
தீர்வு:
 
கூட்டுத் தொடர் வரிசையின் மூன்று அடுத்தடுத்த எண்கள் 24.
 
பொது வித்தியாசம்  d = 4.
 
(a - d\), a, a + d என்பன கூட்டுத் தொடர் வரிசையின் மூன்று அடுத்தடுத்த எண்கள் என்க.
 
எனவே, a - d + a + a + d = 24
 
3a = 24
 
a = 8
 
அதாவது, 8 - 4, 8, 8 + 4.
 
எனவே, தேவையான கூட்டுத் தொடர் வரிசை 4, 8, 12, ...
நான்கு அடுத்தடுத்த எண்கள் கூட்டுத் தொடர் வரிசையில் அமைந்தால் அவை,a - 3d, a - d, a + d and a + 3d. இங்கு, பொது வித்தியாசம் 2d.
Example:
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமைந்த நான்கு அடுத்தடுத்த எண்களின் கூடுதல் 96, மற்றும் பொது வித்தியாசம் 6 எனில் கூட்டுத் தொடர் வரிசையைக் காண்க.
 
தீர்வு:
 
கூட்டுத் தொடர் வரிசையின் நான்கு அடுத்தடுத்த உறுப்புகளின் கூடுதல் 96.
 
பொது வித்தியாசம் 2d = 12
 
d = 6.
 
கூட்டுத் தொடர் வரிசையில் அமைந்த நான்கு அடுத்தடுத்த உறுப்புகளை a - 3d, a - d, a + d மற்றும் a + 3d என்க.
 
கூடுதல்= a - 3d + a - d + a + d + a + 3d = 96
 
4a = 96
 
a = 24
 
a மற்றும் d இன் மதிப்புகளை a - 3d, a - d, a + d மற்றும் a + 3d இல் பிரதியிட,
 
24 - 3(6), 24 - 6, 24 + 6 மற்றும் 24 + 3(6)
 
எனவே, தேவையான் கூட்டுத் தொடர் வரிசை 6, 18, 30, 42, ...