PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகூட்டுத் தொடர் வரிசையில் அடிப்படைசெயல்பாடுகள் பற்றி அறிதல்.
1. கூட்டல் மற்றும் கழித்தல்:
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் ஒரு மாறிலியை கூட்டவோ கழிக்கவோ செய்வதன் மூலம் கிடைக்கும் தொடர் வரிசை ஒரு கூட்டுத் தொடர் வரிசை ஆகும்.
Example:
\(20, 25, 30, 35, 40, 45, ...\) என்ற கூட்டுத் தொடர் வரிசையில்,
இங்கு, \(a = 20, d = 25 - 20 = 5\)
மேற்கண்ட தொடர் வரிசையில் \(5\) ஐ கூட்டினால் கிடைப்பது \(25, 30, 35, 40, 45, ...\)
இது ஒரு கூட்டுத் தொடர் வரிசை ஆகும்.
2. பெருக்கல் மற்றும் வகுத்தல்
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் ஒரு பூச்சியமற்ற மாறிலியால் பெருக்கவோ வகுக்கவோ செய்வதன் மூலம் கிடைக்கும் தொடர் வரிசை ஒரு கூட்டுத் தொடர் வரிசை ஆகும்.
Example:
\(20, 25, 30, 35, 40, 45, ...\) என்ற கூட்டுத் தொடர் வரிசையில்,
இங்கு, \(a = 20\) மற்றும் \(d = 5\)
மேற்கண்ட கூட்டுத் தொடர் வரிசையை \(5\)ஆல் பெருக்க கிடைப்பது, \((20 × 5), (25 × 5), (30 × 5), (35 × 5), (40 × 5), (45 × 5), ...\)
எனவே, \(100, 125, 150, 175, 190, 215, ...\) என்பது ஒரு கூட்டுத் தொடர் வரிசை ஆகும்.
இதைபோல் கொடுக்கப்பட்ட கூட்டுத் தொடர் வரிசையை \(5\) ஆல் வகுக்க கிடைப்பது,
இங்கு, \(4, 5, 6, 7, 8, 9, ...\) என்பது ஒரு கூட்டுத் தொடர் வரிசை ஆகும்.