PDF chapter test TRY NOW
இயற்கணிதம் என்ற கணித பிரிவானது நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. இம்முறையினை பயன்படுத்தி நாம் வயது கணக்குகளுக்கு தீர்வு காணுதல் போன்ற பல பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இப்போது நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில செயல்களை மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டுத் தொகுப்புகளை கொண்டு அறியலாம்.

அண்டவெளியில் உள்ள எந்த ஒரு பொருளின் நிலையையும் அதாவது கப்பல்களையோ, விமானங்களையோ அல்லது வேறு சில பொருட்களையோ பூமியில் அதன் நிலையை அறிய அதன் அட்சரேகை தீர்க்கரேகை மற்றும் உயரம் இவற்றை கொண்டு தீர்மானிக்கலாம். நமது பூமியில் உள்ள ஒரு புள்ளியின் நிலையை அறிய 3 செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தி மூன்று சமன்பாடுகளை பெறலாம். இதில் இரண்டு நேரிய சமன்பாடு மற்றும் ஒரு இருபடிச் சமன்பாடு இருக்கும்.இதனால் நாம் அப்பொருளின் நிலையை சரியாக அறிய அட்ச, தீர்க்க, உயரத்தினை மாறிகளாக கொண்ட சமன்பாடுகளை தீர்ப்பதனால் அறியலாம்.
இந்த முறை தான் GPS (புவி விலைப்படுத்துதல் அமைப்பு) க்கு அடிப்படை ஆகும்.
Reference:
<a href="http://www.freepik.com">Designed by brgfx / Freepik</a>