PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லுறுப்பு இயற்கணிதக் கோவைகளின் மிச்சிறு பொது மடங்கு என்பது அவை ஒவ்வொன்றும் மீதியின்றி வகுபடும் மிகப் பெரிய படியைக் (அல்லது அடுக்கை) கொண்ட கோவையாகும்.
ஒரு எண்ணின் அல்லது இயற்கணிதக் கோவையின் மீ.பொ.ம-வை காரணியாக்க முறை மூலம் பின்வரும் படிகளைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும்:
(i) ஒவ்வொரு கோவைகளையும் அதன் எளிய காரணிகளாக பிரிக்க வேண்டும்.
(ii) பொதுவான காரணிகளின் மிக உயர்ந்த அடுக்கே மீ.பொ.ம ஆக இருக்கும்.
(iii) கோவைகளின் கெழுக்கள் எண்ணாக இருக்குமேயானாள் , அவற்றின் மீ.பொ.ம-வை கண்டறியவும்.
(iv) கோவைகளின் காரணிகள் மற்றும் கெழுக்கள் ஆகியவற்றின் மீ.பொ.ம வின் பெருக்கற்ப்பலன் கொடுக்கப்பட்ட கோவையின் மீ.பொ.ம ஆகும்.
Example:
1. \(16x^3y^2z, 45xy^9z^7, 12x^9y^2z\) ஆகியவற்றின் மீ.பொ.ம காண்க.
தீர்வு:
படி 1: எண் கெழுக்களின் மீ.பொ.ம காண்போம்.
\(16 = 2^4\), \(45 = 3 \times 3 \times 5\), \(12 = 2 \times 2 \times 3\)
\(மீ.பொ.ம(16, 45, 12) = 2^4 \times 3 \times 3 \times 5 = 720\)
படி2: கொடுக்கப்பட்ட மாறிகளின் மீ.பொ.ம காண்போம்.
\(மீ.பொ.ம(x^3y^2z, xy^9z^7, x^9y^2z) = x^9y^9z^7\)
படி3: கோவைகளின் காரணிகள் மற்றும் கெழுக்கள் ஆகியவற்றின் மீ.பொ.ம-வை பெருக்க வேண்டும்.
\(மீ.பொ.ம(16x^3y^2z, 45xy^9z^7,12x^9y^2z) = 720x^9y^9z^7\)
ஆகவே, மீ.பொ.ம = \(720x^9y^9z^7\).
2. \(21(x^4 - x^2), 16(x^2 + 3x)^2\) ஆகியவற்றின் மீ.பொ.ம காண்க.
தீர்வு:
\(21(x^4 - x^2) = 3 \times 7 \times x^2 \times (x^2 - 1)\)
\(16(x^2 + 3x)^2 = 2^4 \times (x^4 + 6x^3 + 9x^2) = 2^4 \times x^2 \times (x^2 + 6x + 9) = 2^4 \times x^2 \times (x + 3)(x + 3)\)
\(21(x^4 - x^2), 16(x^2 + 3x)^2\) இன் மீ.பொ.ம ஆனது:
\(மீ.பொ.ம= 3 \times 7 \times 2^4 \times x^2 \times (x + 1)(x - 1) \times (x + 3)(x + 3)\)
\(= 336 \times x^2(x^2 -1)(x + 3)^2\)
ஆகவே, \(\text{மீ.பொ.ம } (21(x^4 - x^2), 16(x^2 + 3x)^2) = 336 \times x^2(x^2 -1)(x + 3)^2\).