PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விகிதமுறு கோவைகளிள் பெருக்கற் செயலிகளும் உள்ளன.
 
இரண்டு விகிதமுறு கோவைகளை எவ்வாறு பெருக்குவது என்று காண்போம்.
விகிதமுறு கோவைகளிள் பெருக்கற்பலன்
இரண்டு விகிதமுறு கோவைகளின் பெருக்கற்பலனானது அவற்றின் தொகுதிகளின் பெருக்கற்பலன்  வகுத்தல் பகுதிகளின் பெருக்கற்பலன் ஆகும்.
  
  
இரண்டு விகிதமுறு கோவைகளின்  பெருக்கற்பலனுக்கான படிநிலைகள்:
\frac{p(x)}{q(x)} மற்றும் \frac{s(x)}{t(x)} ஆகியன இரண்டு விகிதமுறு கோவைகள். இதில் q(x) \neq 0 மற்றும் t(x) \neq 0 என்க, இந்த இரண்டு விகிதமுறு கோவைகளின் பெருக்கற்பலன் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன:
 
படி 1: தொகுதிகள் p(x) மற்றும் s(x) ஐ பெருக்குக.
 
அதாவது, p(x) \times s(x).
 
படி 2: பகுதிகள் q(x) மற்றும் t(x) ஐ பெருக்குக.
 
அதாவது, q(x) \times t(x).
 
படி 3\frac{p(x) \times s(x)}{q(x) \times t(x)} என்ற கோவையை எளிய வடிவில் எழுதுக.
 
படி 4: கிடைக்கப்பெறும் கோவையானது கொடுக்கப்பட்ட விகிதமுறு கோவைகளின் பெருக்கற்பலன் ஆகும்.
Example:
\frac{6a}{b^2} மற்றும் \frac{b^3}{3a^2} இன் பெருக்கற்பலன் காண்க.
 
தீர்வு:
 
படி 1: தொகுதிகள் 6a மற்றும் b^3 இன் பெருக்கற்பலன் காண்க.
 
6a \times b^3 = 6ab^3
 
படி 2: பகுதிகள் b^2 மற்றும் 3a^2 இன் பெருக்கற்பலன் காண்க.
 
b^2 \times 3a^2 = 3a^2b^2
 
படி 3: கோவை \frac{6ab^3}{3a^2b^2} ஐ எளிய வடிவில் சுருக்குக.
 
\frac{6ab^3}{3a^2b^2} = \frac{\not{3} \times 2 \times \not{a} \times \not{b^2} \times b}{\not{3} \times \not{a} \times a \times \not{b^2}}
 
= \frac{2b}{a}
 
படி 4: கிடைக்கப்பெறும் கோவையை எழுதுக.
 
\frac{6a}{b^2} \times \frac{b^3}{3a^2} = \frac{2b}{a}
 
எனவே, \frac{6a}{b^2} மற்றும் \frac{b^3}{3a^2} இன் பெருக்கற்பலன் \frac{2b}{a}.