PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. உத்தேச மதிப்பு: \(387×42\)
\(387\) மற்றும் \(42\)ஐத் தனித்தனியாக முழுமையாக்கி பெருக்கி விடையைப் பெறலாம்.
\(387\) ஐ எடுத்துக்கொள்வோம்.
இது மூன்று இலக்க எண். இதை அதிகபட்சமாக அருகில் உள்ள \(100′\)கள் வரை முழுமையாக்கலாம்.
மதிப்பிடப்பட்ட எண்ணைக் கண்டறிய செயல்முறைப் படிகளைப் பின்பற்றுவோம்.
படிநிலை | செயல்முறை | செயலாக்கம் |
1 | நூறுகள் இடத்தைக் கவனிப்போம் | \(3\)87 |
2 | அதன் வலதுபுற எண்ணை எடுத்துக்கொள்வோம் | 3\(8\)7 |
3 | பத்துகள் இலக்கத்தின் நிலையை ஆராய்வோம் | \(8 > 5\) எனில் நூறுகள் இலக்க மதிப்போடு ஒன்றைக் கூட்டுவோம். |
4 | அருகில் உள்ள நூறுகளுக்கு முழுமையாக்குவோம் | \(400\) |
இப்போது \(387\) இல் அருகில் உள்ள நூறுகள் மதிப்பு \(400\) எனக் கண்டறிந்தோம்.
அடுத்த எண் \(42\):
இது இரண்டு இலக்க எண். நாம் இதை அதிகபட்சமாக அருகில் உள்ள \(10′\)கள் வரை முழுமையாக்கலாம்.
மதிப்பிடப்பட்ட எண்ணைக் கண்டறிய படிகளைப் பின்பற்றுவோம்.
படிநிலை | செயல்முறை | செயலாக்கம் |
1 | பத்துகள் இடத்தைக் கவனிப்போம் | \(4\)2 |
2 | அதன் வலதுபுற எண்ணை எடுத்துக்கொள்வோம் | \(4\)2 |
3 | ஒன்றுகள் இலக்கத்தின் நிலையை ஆராய்வோம் | \(2<5\) எனில் பத்துகள் இடத்தை அப்படியே விடுவோம். |
4 | அருகில் உள்ள பத்துகளுக்கு முழுமையாக்குவோம் | \(40\) |
எனில் \(42\) இந்த அருகில் உள்ள பத்துகள் \(40\) என கண்டறிந்துள்ளோம்.
இப்போது மதிப்பிடப்பட்ட எண்களைப் பெருக்குவோம்.
அதாவது \(400×40 = 16000.\)
எனவே, மதிப்பிடப்பட்ட பெருக்கல் மதிப்பு \(16000\) ஆகும்.
உண்மையான மதிப்பு \(387×42 = 1596.\) எனவே, மதிப்பிடப்பட்ட பெருக்கல் மதிப்பு உண்மையான மதிப்புடன் நெருக்கமாக உள்ளது.
எனவே, இது ஒரு சரியான கணிப்பாகும்.
2. \(5160 ÷ 392\) இன் மதிப்பைக் கண்டறியவும்.
\(5160\) ஐ அருகில் உள்ள நூறுகளுக்கு முழுமையாக்குவோம்.
படிநிலை | செயல்முறை | செயலாக்கம் |
1 | நூறுகள் இடத்தைக் கவனிப்போம் | 5\(1\)60 |
2 | அதன் வலதுபுற எண்ணை எடுத்துக்கொள்வோம் | 5\(1\)60 |
3 | பத்துகள் இலக்கத்தின் நிலையை ஆராய்வோம் | \(6>5\) எனில் நூறுகள் இலக்க மதிப்போடு ஒன்றைக் கூட்டுவோம். |
4 | அருகில் உள்ள நூறுகளுக்கு முழுமையாக்குவோம் | \(5200\) |
\(5160\) இந்த அருகில் உள்ள நூறு \(5200\)
அடுத்து \(392\) ஐ எடுத்துக்கொள்வோம். இந்த மூன்று இலக்க எண்ணை அருகில் உள்ள நூறுக்கு முழுமையாக்குவோம்.
படிநிலை | செயல்முறை | செயலாக்கம் |
1 | நூறுகள் இடத்தைக் கவனிப்போம் | \(392\) |
2 | அதன் வலதுபுற எண்ணை எடுத்துக்கொள்வோம் | \(397\) |
3 | பத்துகள் இலக்கத்தின் நிலையை ஆராய்வோம் | \(9>5\) எனில் நூறுகள் இலக்க மதிப்போடு ஒன்றைக் கூட்டுவோம். |
4 | அருகில் உள்ள நூறுகளுக்கு முழுமையாக்குவோம் | \(400\) |
இப்போது \(387\) இல் அருகில் உள்ள நூறுகள் மதிப்பு \(400\) எனக்கண்டறிந்தோம்.
இப்போது \(5200\) ஐ \(400\) ஆல் வகுக்கவும்.
உத்தேச மதிப்பின் படி:
சரியான மதிப்பின் படி:
உத்தேச மதிப்பின் படி கிடைத்த எண்ணும் , சரியான மதிப்பின் படி கிடைத்த எண்ணும் சரியாக உள்ளது. எனில் நம் உத்தேச மதிப்பீடு சரியானது.