
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரண்டு இலக்க எண்களுக்கு, அந்த எண்ணை அருகில் உள்ள பத்துகளுக்கு முழுமையாக்கிவிடலாம். இது ஒரு இடத்தின் உத்தேச மதிப்பீடு மட்டுமே.
மூன்று இலக்க எண்களுக்கு, அந்த எண் அருகில் உள்ள பத்துகள் மற்றும் நூறுகளுக்கு முழுமையாக்கலாம். அதாவது, இரண்டு இட உத்தேச மதிப்பீடுகள் (பத்து மற்றும் நூறுகள்) உள்ளன.
நான்கு இலக்க எண்களுக்கு, அந்த எண்ணை அருகில் உள்ள பத்துகள், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான இலக்கங்களை முழுமைப்படுத்தலாம். அதாவது, மூன்று இட உத்தேச மதிப்பீடுகள் (பத்து, நூறுகள் மற்றும் ஆயிரங்கள்) உள்ளன.
அதன் கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் மதிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கு முன், எண்களை மதிப்பிட வேண்டும்.
கூட்டல், கழித்தல் மதிப்பிடுவதற்கு முன், நீங்கள் அதை ஏன் முழுமையாக்க வேண்டும் என்பதைப் பற்றிய யோசனை உங்களுக்கு இருக்க வேண்டும். காரணத்திற்கு ஏற்பத்தான் முழுமையாக்கள் அமையும்.
1. உத்தேச மதிப்பு (கூட்டல்): 2567 + 4128
2567 மற்றும் 4128 ஆகிய இரண்டு எண்களும் ஆயிரக்கணக்கில் இருப்பதால், இரண்டையும் நாம் அருகில் உள்ள 1000க்கு முழுமையாக்கலாம்.
2567 இன் அருகிலுள்ள 1000′கள் 3000 ஆகும், ஏனெனில் நூறுகள் இடத்தில் 5 உள்ளது. அதாவது ஆயிரங்கள் இடத்தில் உள்ள 2 உடன் 1 ஐக் கூட்ட வேண்டும்.
4128 இன் அருகிலுள்ள 1000′கள் 4000 ஆகும், ஏனெனில் நூறுகள் இடத்தில் 1(<5) உள்ளது. அதனால், ஆயிரங்கள் இடத்தில் உள்ள 4 இல் 1 ஐக் கழிக்க வேண்டும்.
இவ்வாறு, மதிப்பிடப்பட்ட தொகை 3000+4000 = 7000 ஆகிவிடும்.
உண்மையான தொகை 2567+4128 = 6695 உடன் சரிபார்ப்போம். எனவே, உத்தேசமாக மதிப்பிடப்பட்டத் தொகை உண்மையானத் தொகைக்கு அருகில் உள்ளது.
2. உத்தேச மதிப்பு (கழித்தல்): 8732 − 267
இங்கே எண்ணில் ஒன்று ஆயிரங்களில் உள்ளது மற்றொன்று நூறுகளில் உள்ளது.
இரண்டையும் 1000 களுக்கு முழுமை செய்து விடுவோம்.
8732 இன் அருகிலுள்ள ஆயிரம் 9000 ஆகும், ஏனெனில் எண் 7(>5) நூறுகளின் இடத்தில் உள்ளது.
மற்றொரு எண்ணான 267 இல், நூறுகளின் இடத்தில் 2 இருப்பதால், 267 இன் அருகிலுள்ள 1000′கள் 0 ஆகும்.
இவ்வாறு, மதிப்பிடப்பட்ட தொகை 9000 − 0 = 9000 ஆகிவிடும்.
இதனை, உண்மையான வேறுபாடு 8732 − 267 = 8465 உடன் சரிபார்ப்போம்.
இங்கு, ஆயிரங்களுக்கு முழுமைபடுத்தபட்ட உத்தேச மதிப்பீடு சரியாக இல்லை.
8732 மற்றும் 267 இரண்டையும் அருகில் உள்ள நூறுகளுக்கு மாற்றுவோம்.
8732 இல் நூறுகள் இடத்தில் 7 இருப்பதால் 8732 இன் அருகிலுள்ள 100′கள் 8700 ஆகும்.(பத்துகள் இடத்தில் 3<5)
267 இன் அருகிலுள்ள 100′கள் 300 ஆகும், ஏனெனில் 6 (>5) பத்து இடத்தில் உள்ளது.
இவ்வாறு, மதிப்பிடப்பட்ட தொகை 8700−300 = 8400 ஆக மாறும். இங்கு, மதிப்பிடப்பட்ட வேறுபாடு உண்மையான வேறுபாட்டிற்கு அருகில் உள்ளது.
இப்படித்தான் நாம் அருகிலுள்ள உத்தேச மதிப்பீட்டைச் சரிசெய்ய வேண்டும். இது கணக்கின் தேவையைப் பொறுத்து மாறுபடும்.