PDF chapter test TRY NOW
நீங்கள் ஒரு கடைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் கடைக்கு ₹100 கொண்டு வந்தீர்கள். உங்கள் வண்டியில் நீங்கள் எடுத்துச் சென்ற பொருட்களின் விலை பின்வருமாறு.
பொருள் | விலை |
வண்ண புத்தகம் | ₹48 |
கலர் பென்சில் | ₹23 |
அளவுகோல் | ₹12 |
கிரேயன்ஸ் | ₹26 |
'உங்களிடம் உள்ள தொகையில் நீங்கள் வாங்கக்கூடிய அதிகபட்ச பொருட்கள் என்னென்ன ?'
சரியான கணக்கீடு செய்து விடை காண சிறிது கூடுதல் நேரம் ஆகும்.
ஆனால் நீங்கள் உத்தேச மதிப்பீட்டின்படி சென்றால், இந்த கேள்விக்கான பதிலை சில நொடிகளில் காணலாம்.
வழங்கப்பட்ட பொருட்களின் உத்தேச முழுமையாக்கப்பட்ட மதிப்புகள் ₹50, ₹20, ₹10, ₹30. இது ₹110 ஆகிறது..
உங்களிடம் ₹100 இருப்பதால், அந்த பொருட்களில் ₹10க்கு அருகில் உள்ள பொருளை விலக்கிவிடவேண்டும். அதாவது ₹12 செலவாகும் அளவுகோலை விட்டுவிட வேண்டும் இதன் மூலம் கொண்டு வந்த ₹100 இல் அளவுகோளைத் தவிர மற்ற பொருட்களை வாங்க முடியும் எனக் கணக்கிடலாம்.
இதன் மூலம், பல எண்கள் சேர்ந்து வரும்போதும் அது உத்தேச எண்களால் எளிதாகக் கணக்கிட முடியும் என்பது புலனாகிறது.
Important!
எண்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கு தனி செயல்முறை எதுவும் இல்லை. மேலும் இது தேவையான துல்லியம் மற்றும் மதிப்பிடப்பட்ட பதில் எவ்வளவு விரைவாக நமக்குத் தேவை என்பதைப் பொறுத்தது. மேலும், மதிப்பிடப்பட்ட பதில் கேள்வியை பாதிக்கக்கூடாது.