PDF chapter test TRY NOW

ஒரு எண்ணை அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கும்  செயல்முறையைப் பார்ப்போம்.ஒரு எண்ணை முழுமையாக்க  முன்னதைப்போலவே இதிலும் \(4\) படிநிலைகள் உள்ளன.
படிநிலை 1: ஆயிரங்கள் இலக்கத்தில் உள்ள எண்ணைக் காண்க.
 
படிநிலை 2: அதன்  வலது பக்க நூறாம் இலக்க  எண்ணைப் பார்க்க.
 
படிநிலை 3: அந்த இலக்கமானது \(5\) அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், ஆயிரங்கள் இலக்க எண்ணுடன்  \(1\) ஐச் சேர்க்கவும். குறைவாக இருந்தால் அப்படியே விடவும்.
 
படிநிலை 4: ஆயிரங்கள்  இலக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள எல்லா  இலக்கங்களையும்  சுழியமாக மாற்றவும்.
Example:
\(5782\)ஐ எடுத்து கொள்வோம்.
 
இதில் உள்ள ஆயிரங்கள் இலக்க மதிப்பைக் காண்க - \(5\).

இதன் வலதுபுற எண் \(7\), அதாவது \(5\) ஐ விட அதிகம்.

அதனால் ஆயிரங்கள் இடத்தில் உள்ள \(5\) உடன் ஒன்றைச் சேர்க்கவும். \((5+1=6)\).
 
அதன் பின் உள்ள எண்களைச் சுழியமாக்கி \(6000\) என்று முழுமையாக்க வேண்டும்.
 
இதையே அருகில் உள்ள நூறுகளுக்கு, பத்துகளுக்கு மாற்ற முயலுங்கள்.

நூறுகளுக்கு முழுமைப்படும்போது \(5800\) எனவும்.

பத்துகளுக்கு முழுமைப்படும் போது \(5780\) எனவும் ஆகும்.