PDF chapter test TRY NOW
இரண்டு விகிதங்கள் a:b::c:d என்ற விகிதத்தில் இருக்கும் போது, அதாவது இரண்டு விகிதங்கள் விகிதச் சமத்தில் இருந்தால், a மற்றும் d என்பன விகித சம அறுதிகள்(கோடி உறுப்புகள்) எனவும் b மற்றும் c என்பன இடை விகித சமன்(நடு உறுப்புகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. விகித சம அறுதிகளின் பெருக்கற்பலன் = இடைவிகித சமன்களின் பெருக்கற்பலன்.
'a' மற்றும் 'd' கோடி உறுப்புகளின் பெருக்கற்பலன் மற்றும் 'b' மற்றும் 'c' நடு உறுப்புகளின் பெருக்கற்பலன் .
மேலும், இரண்டு விகிதங்கள் சமமாக இருந்தால், அவை பின்வருமாறு தொடர்புபடுத்தப்படலாம்.
இது விகிதசமனின் குறுக்குப் பெருக்கல் என்று அழைக்கப்படுகிறது.
Example:
7:2 மற்றும் 21:6 விகிதங்கள் விகிதச் சமமானதாக உள்ளனவா என்று பார்க்கலாம்.
நிலைமையைச் சரிபார்க்க விகிதச் சமன் விதியை பயன்படுத்தலாம்.
'இரண்டு விகிதங்கள் a:b::c:d என்ற விகித சமமாக இருக்கும் போது,
விகித சம அறுதிகளின் பெருக்கற்பலன் = இடைவிகித சமன்களின் பெருக்கற்பலன்.
விகித சம அறுதிகளின் பெருக்கற்பலன் = இடைவிகித சமன்களின் பெருக்கற்பலன்.
இங்கே a = 7, b = 2, c = 21 மற்றும் d = 6.
ad = bcல் மதிப்புகளைப் பயன்படுத்தவும்.
7×6 = 2×21
42 = 42.
விகிதச் சமன் விதியை திருப்திப்படுத்துவதால், கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகிதச் சமத்தில் உள்ளன.