PDF chapter test TRY NOW

கோணம்:
ஒரு பொதுவான புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு கதிர்களால் உருவான உருவம் கோணம் எனப்படும்.
B_1.png
 
கோணத்தை உருவாக்கும் கதிர்கள் "பக்கங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. அக்கதிர்கள் சந்திக்கும்
புள்ளி "முனைப்புள்ளி (உச்சி)" என்று அழைக்கப்படுகிறது .
கோணங்களைப் பெயரிடுதல்:
ABC (1).png
 
கோணங்களுக்கு பின்வரும் வழிகளில் பெயரிடலாம்.
 
1. முனைப்புள்ளியை தனியாக எழுதலாம்.
 
மேலே உள்ள கோணத்தின் பெயர் \(\angle B\).
 
2. முனைப்புள்ளி நடுவில் அமையுமாறும், இரண்டு பக்கங்களை இணைத்தும் பெயர் எழுதலாம்.
 
மேலே உள்ள கோணத்தின் பெயர் \(\angle ABC\) or \(\angle CBA\).
 
3. எண் அல்லது கிரேக்க எழுத்துக்களை கொண்டு பெயரிடலாம்.
 
மேலே உள்ள கோணத்தின் பெயர் \(\angle 1\).
சிறப்புக் கோணங்கள்:
குறுங்கோணம்:
 
B_2.png
 
\(90^\circ\) கோணத்தை விடக் குறைவாக உள்ள கோணம் குறுங்கோணம் என அழைக்கப்படுகிறது.
 
 
செங்கோணம்:
 
B_3.png
 
சரியாக \(90^\circ\) அளவுள்ள கோணம் செங்கோணம் என அழைக்கப்படுகிறது.
 
 
விரிகோணம்:
 
B_4.png
 
\(90^\circ\) கோணத்தை விட அதிகமாக உள்ள கோணம் விரிகோணம் என அழைக்கப்படுகிறது.