PDF chapter test TRY NOW

மிகச் சிறப்புக் கோணங்கள்
பூச்சியக் கோணம்:
 
\(\overrightarrow {AC}\) ஆனது \(\overrightarrow {AB}\) இல் மிகச் சரியாகப் பொருந்தி உள்ளது எனில் கோணமானது \(0^\circ\) ஆகும். இது பூச்சியக்கோணம் ஆகும்.
 
B_5.png
 
நேர்கோணம்:
 
‘\(B\)' ஆனது ‘\(C\)’க்கு எதிர்த் திசையில் உள்ளது. தொடக்கப்புள்ளி ‘\(A\)’ ஆனது நடுவில் உள்ளது எனில் கோணமானது \(180^\circ\) ஆகும். இது நேர்கோணம் ஆகும்.
 
B_6.png
சிறப்புச் சோடிக் கோணங்கள்
நிரப்புக் கோணங்கள்:
இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை \(90^\circ\) எனில் அக்கோணங்கள் நிரப்புக் கோணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
CompangAGw1010.png
 
இந்த படத்தில் உள்ள கோணங்கள் \(\angle XOY = 55^\circ\) மற்றும் \(\angle  POQ = 35^\circ\).
 
\(\angle XOY + \angle POQ = 55^\circ + 35^\circ = 90^\circ\)
 
எனவே, இவ்விரு கோணங்களும் நிரப்புக் கோணங்கள் ஆகும்.
 
 
மிகை நிரப்புக் கோணங்கள்:
இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை \(180^\circ\) எனில் அக்கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
SupangEGw1076.png
 
இந்த படத்தில் உள்ள கோணங்கள் \(\angle XOY = 130^\circ\) மற்றும் \(\angle  POQ = 50^\circ\).
 
\(\angle XOY + \angle POQ = 130^\circ + 50^\circ = 180^\circ\)
 
எனவே, இவ்விரு கோணங்களும் மிகை நிரப்புக் கோணங்கள் ஆகும்.