PDF chapter test TRY NOW
கோணங்களைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற, நாம் கோணங்களை அளவிட வேண்டும். கோணங்களை நாம் கோணமானியை (protractor) பயன்படுத்தி அளக்க முடியும்.
கோணமானி என்பது கோணத்தை அளவிடப் பயன்படும் ஒரு வடிவியல் கருவியாகும்.
கோணத்தை 0^\circ முதல் 360^\circ வரை அளக்க முடியும். ஒரு முழுமையான வட்டத்தின் கோணம் 360^\circ. ஆனால், கோணமானி அரைவட்டமாக இருப்பதால், நாம் கோணமானியை பயன்படுத்தி 180^\circ வரை அளக்கலாம்.
கோணத்தை அளக்கும் வழிமுறைகள்:
படி 1: கோணமானியின் நடுப்பகுதியை கோணத்தின் உச்சியில் வைக்க வேண்டும்.
படி 2: கோணத்தின் அடிப்பகுதி முழுவதும் 0^\circ உடன் ஒத்துப்போகும் வகையில் வைக்க வேண்டும்.
படி 3: இப்பொழுது மற்றொரு கதிர் கோணமானியில் வெட்டும் அளவைக் குறித்துக் கொள்க. அதுவே, அக்கோணத்தின் அளவாகும்.
கோணமானியைப் பயனபடுத்திச் செங்கோணத்தை (90^\circ) வரைதல்:
குறுங்கோணம் வரைதல் | செங்கோணம் வரைதல் | விரிகோணம் வரைதல் |
\overline{PA} என்ற கோட்டுத்துண்டு வரைக. ![]() | \overline{PA} என்ற கோட்டுத்துண்டு வரைக. ![]() | \overline{PA} என்ற கோட்டுத்துண்டு வரைக. ![]() |
கோணமானியின் நடுப்புள்ளி P என்ற புள்ளியின் மீது அமையுமாறு நேராக வைக்கவும். ![]() | கோணமானியின் நடுப்புள்ளி P என்ற புள்ளியின் மீது அமையுமாறு நேராக வைக்கவும். ![]() | கோணமானியின் நடுப்புள்ளி P என்ற புள்ளியின் மீது அமையுமாறு நேராக வைக்கவும். ![]() |
உள் அளவுகோளில் 60^\circ
இல் ஒரு புள்ளியைக் குறித்து Q எனப் பெயரிடுக. ![]() | உள் அளவுகோளில் 90^\circ இல் ஒரு புள்ளியைக் குறித்து Q எனப் பெயரிடுக. ![]() | உள் அளவுகோளில் 125^\circ இல் ஒரு புள்ளியைக் குறித்து Q எனப் பெயரிடுக. ![]() |
கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் PQ வரைக. ![]() \angle APQ = 60^\circ என்பது தேவையான குறுங்கோணம் ஆகும். | கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் PQ வரைக. ![]() \angle APQ = 90^\circ என்பது தேவையான செங்கோணம் ஆகும். | கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் PQ வரைக. ![]() \angle APQ = 125^\circ என்பது தேவையான விரிகோணம் ஆகும். |