PDF chapter test TRY NOW

ஒரு கோடமைப் புள்ளிகள்
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டின் மீது அமைந்தால் அப்புள்ளிகள் "ஒரு கோடமைப் புள்ளிகள்" என அழைக்கப்படுகின்றன.
45.png
செங்குத்துக் கோடுகள்
இரண்டு கோடுகள் ஒன்றையொன்று \(90^\circ\) கோணத்தில் வெட்டும்போது, ​அக்கோடுகள்
"செங்குத்துக் கோடுகள்" எனப்படும்.
 
14 (1).svg
 
இங்கே, \(AB\) மற்றும் \(CD\) ஆகிய கோடுகள் ஒன்றையொன்று \(90^\circ\) கோணத்தில் வெட்டுவதால், இக்கோடுகள் "செங்குத்துக் கோடுகள்" ஆகும்.
ஒரு புள்ளி வழிக் கோடுகள்
பல கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக் கொண்டால், அவ்வாறு வெட்டிக்கொள்ளும் புள்ளி "ஒருங்கமைப் புள்ளி" எனவும், அக்கோடுகளை "ஒரு புள்ளி வழிக் கோடுகள்" என்றும் அழைக்கலாம்.
 
B9.png