PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பின் மூன்றாவது பக்கமானது, இரு பக்கங்களின் வித்தியாசம் மற்றும் கூடுதல் ஆகியவற்றின் இடையில் அமையும்.
இங்கு,
\(a - b < c\)
\(b - c < a\) மற்றும்
\(c - a < b\)
Example:
\(AB = c = 3\) செ.மீ, \(BC = a = 4\) செ.மீ மற்றும் \(AC = b =5\) செ.மீ கொண்ட \(ABC\) என்ற முக்கோணத்தை எடுத்துக்கொள்வோம்.
\(ABC\) என்ற முக்கோணத்தின் சமனின்மை பண்பை சரிபார்க்கலாம்,
\(a - b = 4 - 5 = -1 < 3 = c\)
\(b - c = 5 - 3 = 2 < 4 = a\) மற்றும்
\(c - a = 3 - 4 = -1 < 5 = b\)
Important!
\(a, b\) மற்றும் \(c\) என்பன முக்கோணத்தின் பக்கங்கள், \(a\) மற்றும் \(b\) என்பன தெரிந்த பக்கங்கள் \(c\) என்பது தெரியாத பக்கம் எனில் முக்கோணத்தின் சமனி பண்பின் மூலம் முக்கோணத்தின் மூன்றாவது பக்கத்தைக் காணலாம். மூன்றாவது பக்கம் \(c\) இன் மதிப்பு கூடுதல் \((a+b)\) இன் மதிப்பை விட குறைவாக இருக்கும் மற்றும் வித்தியாசம் \((a-b)\) மதிப்பை விட குறைவாக இருக்கும். எனவே, \((c)\) இன் மதிப்பு வித்தியாசம் \((a-b)\) மற்றும் கூடுதல் \((a+b)\)க்கு இடையில் இருக்கும்.